வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் (Jamaat-ul-Mujahideen அல்லது Jama'atul Mujahideen Bangladesh, சுருக்கமாக: JMB, வங்காள மொழி: জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ) என்பது இஸ்லாமிய இயக்கமாகும். இது வங்காளதேசத்தில் 1998 ஆம் ஆண்டு தாக்கா நகரில் அப்துர் ரஹ்மான் என்பவரால் தொடங்கப்பட்டது[1]. 2001 ஆம் ஆண்டு தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பின்னரே இவ்வியக்கத்தைப் பற்றி தெரிய ஆரம்பித்தது[2]. இந்த இயக்கமானது வங்காளதேச அரசால் தீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு தன்னார்வ நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடந்த கண்காணிப்பில் வங்காளதேசம் முழுவம் 300 இடங்களில் 500 வெடிகுண்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இவ்வியக்கம் தடை செய்யப்பட்டது[3].
Remove ads
நோக்கம்
வங்காளதேசம் ஷரியா சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்[4]. மேலும் தங்களுக்கு தேவையெனில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான்களின் கொள்கையையும் பின்பற்றத் தயங்க மாட்டோம் என அறிவித்தது[4]. மேலும் ஜனநாயகத்தை எதிர்ப்பது போன்றவை இவ்வமைப்பின் கொள்கைகளாகும்"[5].
உறுப்பினர்கள்
இந்த அமைப்பில் 1,00,000 கும் அதிகமாக ஆதரவாளர்கள் உள்ளனர்.[6] மேலும் இந்த அமைப்பு நாடு முழுமைக்கும் பரவி உள்ளது.[7] இந்த இயக்கமானது சட்டபூர்வ இஸ்லாமிய இயக்கங்களோடும் தொடர்பு வைத்துள்ளது.[8]
கைது நடவடிக்கை
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தியதி இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் நால்வருக்கு நீதிபதியைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.[9]
வெளி இணைப்புகள்
- JMB 2007 பரணிடப்பட்டது 2007-06-06 at the வந்தவழி இயந்திரம், அறிக்கை
- பிபிஸி
- அறிக்கை
- JMB, பாதுகாப்புச் செய்தி
- பத்திரிகைச் செய்தி
- தலையங்கம் பரணிடப்பட்டது 2006-03-07 at the வந்தவழி இயந்திரம்
- கட்டுரை,2003
- பல்கலைக் கழகக் கட்டுரை
- பத்திரிகைச் செய்தி
- பத்திரிகைச் செய்தி
- பத்திரிகைச் செய்தி
- பத்திரிகைச் செய்தி
- வரைபடம்
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads