வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்

வங்காளதேசத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்map
Remove ads

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் (Bangladesh National Museum) என்பது வங்காளதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியம் ஆகும்.[2] இந்த அருங்காட்சியகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, இனவியல் மற்றும் அலங்கார கலைத் துறை, வரலாறு மற்றும் பாரம்பரிய கலைத் துறை, இயற்கை வரலாற்றுத் துறை மற்றும் சமகால மற்றும் உலக நாகரிகத் துறை போன்ற பல துறைகளில் காலவரிசைப்படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வளமான பாதுகாப்பு ஆய்வகமும் உள்ளது. நளினி காந்தா பட்டசாலி 1914-1947 காலத்தில் அருங்காட்சியகத்தின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.[3]

Thumb
அமர்ந்திருக்கும் நிலையில் இரிசபநாதரின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் முன்னாள் பெயர், நிறுவப்பட்டது ...
Remove ads

வரலாறு

Thumb
சையத் மைனுல் உசேன் வடிவமைத்த வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் முதலில் 20 மார்ச் 1913 அன்று டாக்கா அருங்காட்சியகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. 7 ஆகஸ்ட் 1913 அன்று வங்காள ஆளுநரான கார்மைக்கேல் பிரபுவால் முறையாக திறந்து வைக்கப்பட்டது. ஜூலை 1915 இல் இது டாக்காவின் நைப் நசீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இது 1983 நவம்பர் 17 அன்று வங்காளதேச தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இது டாக்காவின் சாபாக் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[4] இது 1978 முதல் "வங்காளதேசத்தில் இசுலாமிய கலை, அட்டவணை"எனும் பெயரில் தொடங்கி பல வெளியீடுகளைக் கொண்டுள்ளது.[5]

இந்த தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட ஒவ்வொரு நாளும் சராசரியாக 2000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள். வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். பெரியவர்களுக்கு 40 ரூபாயும், சிறார்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டவர்களுக்கு 500 மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறாது. [6] இருப்பினும், மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு அனுமதி இலவசம்

Remove ads

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads