வசுமித்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசுமித்திரன் (Vasumitra), மச்ச புராணத்தின் படி[1] வட இந்தியாவின் சுங்கப் பேரரசின் நான்காவது பேரரசரான வசுமித்திரனின் ஆட்சிக் காலம் கி மு 131 முதல் 124 முடிய என அறியப்படுகிறது.
பேரரசர் அக்கினிமித்திரன் – பேரரசி தாரிணிக்கும் பிறந்த வசுமித்திரனின் ஒன்று விட்ட சகோதரன் வசுஜெயஸ்தா ஆவான்.
மகாகவி காளிதாசன் இயற்றிய மாளவிகாக்கினிமித்திரம் எனும் நூலில், சுங்கப் பேரரசர் வசுமித்திரன் தனது தேர்ந்த குதிரைப்படைகளைக் கொண்டு, சிந்து ஆற்றின் கரையில் நடந்த போரில், இந்தோ கிரேக்கர்களை வென்றதாக குறிப்பிடுகிறார்.[2]
பாணரின் ஹர்ச சரித்திரம் எனும் நூலில், வசுமித்திரனை சுமித்திரன் எனக் குறிப்பிடுகிறார். சுமித்திரன் ஒரு நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, மூலதேவன் அல்லது மித்திரதேவன் என்பவன் சுமித்திரனை கொன்று விடுவதாகக் குறிப்பிடுகிறார்.
வசுமித்திரனுக்குப் பின்னர் சுங்கப் பேரரசின் மன்னராக பாகபத்திரன் ஆட்சிக்கு வந்ததார்.[3]
Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads