வஞ்சித்தளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வஞ்சித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரும் தளைகளில் ஒன்று. இது 'கனி' வாய்பாட்டில் முடியும் சீரோடு 'நேர்' அல்லது 'நிரை' அசையில் தொடங்கும் சீர் வந்து தளையும் முறை.

வஞ்சித்துறைப் பாடல்
1
'மைசிறந்தனமணிவரை [1]
கைசிறந்தனகாந்தளும் [2]
பொய்சிறந்தனர்காதலர்
மெய்சிறந்திலர்விளங்கிழாய்.'[3]
இந்த வஞ்சித்துறைப் பாடலில் இந்த வஞ்சித்தளை பயின்று வந்துள்ளதைத் காணலாம்.
வஞ்சித் தாழிசைப் பாடல்கள்
1
'மடப்பிடியைமதவேழம்
தடக்கையான்வெயின்மறைக்கும்.
இடைச்சுரமிறந்தார்க்கே
நடக்குமென்மனனேகாண்.
2
'பேடையையிரும்போத்துத்
1தோகையால்வெயின்மறைக்கும்
காடகமிறந்தார்க்கே
ஓடுமென்மனனேகாண்.
3
'இரும்பிடியையிகழ்வேழம்
பெருங்கையான்வெயின்மறைக்கும்
அருஞ்சுரமிறந்தார்க்கே
விரும்புமென்மனனேகாண்.' [4]
இந்த வஞ்சித் தாழிசைப் பாடல்களில் இந்த வஞ்சித்தளையினைக் காணலாம்.
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads