வடக்கு இங்கிலாந்து

From Wikipedia, the free encyclopedia

வடக்கு இங்கிலாந்து
Remove ads

வடக்கு இங்கிலாந்து (Northern England, மேலும் எளிதாக the North அழைக்கப்படுகிறது) என்பது இங்கிலாந்தின் வடக்குப் பகுதியாகும். இது ஒரு தனி கலாச்சாரப் பகுதியாக கருதப்படுகிறது. இதன் எல்லையானது வடக்கில் இசுக்கொட்லாந்து எல்லைவரையும், தெற்கில் டிரெண்ட் ஆற்றை எல்லையாகக் கொண்டும் பரவியுள்ளது, என்றாலும் அதன் தெற்கு எல்லை குறித்த வரையறைகளில் துல்லியத்தன்மையானது மாறுபடுகிறது. வடக்கு இங்கிலாந்து சுமார் மூன்று வட்டாரப் பகுதிகளைக் கொண்டுள்ளது அவை வட கிழக்கு, வட மேற்கு மற்றும் யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகிய வட்டாரங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 37,331 km2 (14,414 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டு அதில் 14.9 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டதாக இருந்தது. இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களில் பெருமளவு பூங்காக்களானது வடக்கு இங்கிலாந்திலேயே உள்ளன. ஆனால் இதன் பெருமளவு பகுதிகள் நகரமயமானவையாக உள்ளன. இப்பகுதியானது கிரேட்டர் மான்செஸ்டர், மெர்ஸ்சைடு, டெஸ்ஸைடு, டையனேசைட், வியர்சைடு, தெற்கு மற்றும் மேற்கு யார்க்ஷயர் ஆகிய நகரத்தொகுப்புகளைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் வடக்கு இங்கிலாந்துNorthern England North of England, the North Country, இறையாண்மை நிலை ...

இப்பகுதியானது பல குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பிரிட்டான்கள், பெரிய பிரித்தானியாவின் பிரிட்டோனிக் இராச்சியம் ஆகியவற்றில் இருந்து ரோமானியர்கள், ஆங்கிலோ-சாக்சன்ஸ், செல்ட்ஸ் மற்றும் டேன்ஸ் ஆகியோர் வரை இப்பகுதியைக் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1066 ஆம் ஆண்டில் நோர்மானியரின் வெற்றிக்குப் பிறகு, வடகிழக்கு ஹாரிங் அழிவைச் சந்தித்தது. இந்த பகுதியில் ஆங்கிலோ- ஸ்காட்லாந்து எல்லைப் போரானது பிரிட்டனானது ஸ்டூவர்ட்ஸின்கீழ் வரும்வரை நிகழ்ந்தது. இக்காலகட்டத்தில் சில நிலப் பகுதிகள் இங்கிலாந்திற்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையில் பலமுறை கைமாறின. தொழிற்புரட்சியின்போது பல கண்டுபிடிப்புகள் வட இங்கிலாந்தில் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இதன் நகரப்பகுதிகளில், சமூக எழுச்சியுடன், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன, அதன் ஒரு பகுதியாக இப்பகுதிகள் தொழிற்சங்கவாதத்தில் இருந்து மான்செஸ்டர் முதலாளித்துவத்திற்கு மாறின. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வடக்கின் பொருளாதாரத்தில் நெசவு, கப்பல் கட்டுதல், எஃகு உற்பத்தி மற்றும் சுரங்கம் போன்ற கனரக தொழில்கள் ஆதிக்கம் செலுத்தின. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து வந்த தொழில்மயமழிதல், வடக்கு இங்கிலாந்தைக் கடுமையாக பாதித்தது, மற்றும் தென் இங்கிலாந்தை ஒப்பிடும்போது இங்கு பல நகரங்கள் காலியாயின.

வடக்கு இங்கிலாந்தின் வலுவான பொருளாதார வளர்ச்சியில் அதன் சில பகுதிகளில் நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் சேவைத் துறைப் பொருளாதார மாற்றம் போன்றவை ஏற்பட்டன. ஆனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் மற்றும் கலாசாசாரம் ஆகிய இரண்டிலும் ஒரு திட்டவட்டமான பிளவானது அதன் வடக்கு-தெற்கு பகுதிகளுக்கு இடையில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடந்த இடப்பெயர்வு, குடியேற்றம் மற்றும் உழைப்பு ஆகியவை வடக்கு இங்கிலாந்தின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளன, மேலும் இப்பகுதியானது தனித்துவமான பேச்சுவழக்கு, இசை, உணவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Remove ads

விளக்கம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads