வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்

From Wikipedia, the free encyclopedia

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்
Remove ads

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் (vaṭacol tamiḻ akara varicaic curukkam) என்பது மறைமலை அடிகளின் மகளாகிய திருவரங்க நீலாம்பிகை அம்மையார் இயற்றிய ஒரு நூல்.[1] இந்நூல் 24 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது.[2] இந்நூல் வெளிவந்த காலத்தில் பேச்சுவழக்கில் மிகுதியாகக் கலந்திருந்த வடசொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. வடசொற்கலப்பின்றிப் பேசவும் எழுதவும் கற்பிப்பதற்காக எழுதப்பட்ட இந்நூல் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தினால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், நூல் பெயர்: ...
Remove ads

நூலாசிரியர்

நூலாசிரியரான திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) மறைமலை அடிகளின் மகளாவார். சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கே அறிந்திருந்தவர். மறைமலை அடிகளிடம் கல்வி கற்ற இவர் ஏற்கனவே, வடசொற் றமிழ் அகரவரிசை என்னும் நூலை 242 பக்கங்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலையும் 104 பக்கங்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.[4]

Remove ads

உள்ளடக்கம்

அகங்காரம் முதல் வைராக்கியம் வரையான ஏறத்தாழ 1465 வட சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads