வடித்திறக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடித்திறக்கல் அல்லது துளித்தெடுப்பு (distillation) என்பது, கொதிக்கும் ஒரு நீர்மக் கலவையில் இருந்து வேதிப்பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாட்டைக் கொண்டு பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். வடித்திறக்கல் வேறொரு பெரும் வேதிச்செலுத்தத்தின் பகுதியாக அமையும் என்பதால் இதனை ஒரு அலகுச் செலுத்தமாகவும் கருதலாம். பிரித்தல் செலுத்தங்களில் பழமையானதும் முதன்மையானதும் வடித்திறக்கலே.

1: கலவையை கொதிக்கவைக்க பயன்படும் வெப்ப முதல்
2:கொதிக்க வேண்டிய கலவையை கொண்ட வட்டஅடிக்குடுவை
3: வடித்திறக்கல் தலைப்பகுதி
4: வெப்பமானி
5: ஆய்வுக்கூட ஒடுக்கி
6: குளிர்படுத்தும் நீர் உற்புகும் பகுதி
7: குளிர்படுத்தும் நீர் வெளியேறும் பகுதி
8: வடித்து இறக்கிய திரவத்தை சேமிக்கும் குடுவை
9: வெற்றிட உமிழி மற்றும் காற்று உட்புகும் பகுதி
10: வடித்திறக்கல் அமைப்பின் வாங்கி
11: கலவையின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ஆளி
12: கலவையை கலக்கும் வேகத்தை கட்டுப்படுத்தும் ஆளி
13: கலவையை கொதிக்கவைக்கவும், கலக்கவும் பயன்படும் ஆய்வுக்கூட உபகரணம்
14: குடுவையிற்கு வெப்பம் கடத்த பயன்படும் பதார்த்தம் (எண்ணெய் / மணல் )
15: கலவையை கலக்க பயன்படும் அமைப்பு (படத்தில் காட்டப்படவில்லை )
16: ஒடுங்கிய திரவத்திற்கான குளிர்விக்கும் திரவம் .
கொதிக்கும் கலவையின் வளிமப் பகுதி குறைகொதிநிலை வேதிப்பொருளை அதிகமாகக் கொண்டிருக்கும். அந்த வளிமப் பகுதியை குளிர்வித்து நீர்மமாக்கினால், பிறகு அந்த நீர்மத்தில் பெரும்பான்மையாகக் குறைகொதிநிலைப் பொருளே இருக்கும். உள்ளிட்ட நீர்மத்தில் வளிமமாகாமல் இன்னும் நீர்மமாகவே இருக்கும் பகுதியில் உயர்கொதிநிலைப் பொருட்கள் பெரும்பான்மையினதாக இருக்கும்.
வடித்திறக்கல் செயன்முறைக்கு ஆற்றல் தேவை அதிகம் என்றாலும், இதற்குப் பல பயன்கள் உண்டு. இதில் முதன்மையானது கரட்டுப் பாறைநெய்யை அதன் பல்வேறு பின்னங்களாகப் பகுத்துப் பிரிப்பதாகும். கடல் நீரில் இருந்து உப்பை அகற்றுவதற்கும் துளித்தெடுப்பு உதவும். காற்றில் இருந்து ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கான் போன்ற கூறுகளைப் பிரிப்பதற்கும், நொதிப்புக் கரைசல்களில் இருந்து மதுவைப் பிரிப்பதற்கும் வடித்திறக்கல் செயன்முறைகள் உதவுகின்றன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads