வணிக அரண்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வணிக அரண்(கள்) (Trade barriers) பன்னாட்டு வணிகத்தின் மீது அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆகும்.[1]
பொதுவாக பொருளியலாளர்கள் வணிக அரண்கள் தீங்கு விளைவிப்பவை எனவும் பொருளியல் செயல்திறனைக் குறைக்கின்றன எனவும் கருதுகின்றனர். இதனை விளக்க ஒப்பீட்டு மேம்பாடு கருதுகோளை குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலான வணிக அரண்கள் இவ்வாறே செயல்படுகின்றன: வணிகத்தின் மீது ஏதேனும் ஒருவகையில் மதிப்பைக் கூட்டி (வரி, நேரம், நிருவாகக் கட்டுப்பாடுகள், ஒதுக்கீடு) அவ்வணிகத்தின் வினைபொருளின் விலையைக் கூட்டுதல் அல்லது கிடைக்குந்தகைமையை அரிதாக்குதல். இரண்டு அல்லது அதற்கு மேலான நாடுகள் தொடர்ந்து வணிக அரண்களை ஒருவருக்கொருவர் எதிராக பயன்படுத்துமானால் வணிகப் போர் என அது அறியப்படுகின்றது. இந்த அரண்கள் தீர்வைகள் மூலமாகவோ (இறக்குமதி மீது நிதிச்சுமையை ஏற்றுதல்) தீர்வையற்ற வணிக அரண்கள் மூலமாகவோ (இவை நேரடி அல்லது மறைமுக வழிகள் மூலம் இறக்குமதியைத் தடை செய்கின்றன; அரிதாக ஏற்றுமதித் தடைகளும் விதிக்கப்படுகின்றன) செயல்படுத்தப்படுகின்றன.
கருத்தியல்படி, கட்டற்ற வணிகம் அனைத்து வணிக அரண்களையும் நீக்கிய ஒன்றாகும்; நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அரிதாக சில விலக்குகள் தரப்படலாம். ஆனால் நடைமுறையில் கட்டற்ற வணிகத்தை ஊக்குவிக்கும் நாடுகள் கூட வேளாண்மை, எஃகு போன்ற சில தொழில்களுக்கு சிறப்பு விலக்குகள் அளிக்கின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads