வத்திக்கான் நகரின் தேசியக் கொடி

From Wikipedia, the free encyclopedia

வத்திக்கான் நகரின் தேசியக் கொடி
Remove ads

வத்திக்கான் நகரின் தேசியக் கொடி என்பது, சூன் 7, 1929 அன்று திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் கையொப்பம் இடப்பட்ட இலாதிரன் உடபடிக்கையின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட கொடியாகும். இது முன்னமே இருந்த திருத்தந்தை நாடுகளின் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும்.

விரைவான உண்மைகள் பயன்பாட்டு முறை, அளவு ...
Thumb
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவுக்குப்பின் கொன்சாகா ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் வத்திக்கான் நகரின் கொடி இடம்: ஆக்போர்டு, இங்கிலாந்து
Thumb
அப்பல்லோ 11இல் கொண்டு செல்லப்பட்ட வத்திக்கான் நகரின் கொடி, நிலவிலிருந்து எடுக்கப்பட்ட சில கற்களோடு வத்திக்கான் அரும்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
Remove ads

கொடியின் சிறப்பு பண்புகள்

உலகிலேயே சதுரமாக இருக்கும் இரு தேசியக் கொடிகளுள் இதுவும் ஒன்று. மற்றொன்று சுவிட்சர்லாந்து நாட்டின் கொடியாகும்.

இக்கொடி சதுர வடிவுள்ளதாகும். அச்சதுரம் சமமாக பிரிக்கப்பட்டு, இடப்புறம் மஞ்சள் அல்லது தங்க நிறத்திலும். வலப்புறம் திருப்பீட சின்னம் நடுவில் உள்ள வெள்ளை நிறமும் கொண்டுள்ளது. திருப்பீடச் சின்னமானது பதினொன்றாம் பயஸால் பயன்படுத்தப்பட்ட மும்முடியையும், புனித பேதுருவின் சாவியும் இருக்கும். இது தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகளாகும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் இது குறிக்கும்.

Remove ads

திருத்தந்தை நாடுகளின் கொடிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads