வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 (Wildlife Protection Act, 1972 ) 1972 இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது. 1972 ஆம் ஆண்டிற்கு முன்னால் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. மற்ற சீர்திருத்த நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இச்சட்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட அட்டவணைப் பட்டியல்கள் உள்ளன. உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது.

விரைவான உண்மைகள் சான்று, இயற்றியது ...

இச்சட்டம் காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது; இவற்றோடு இணைக்கப்பட்ட துணை நடவடிக்கைகள் அல்லது இடைப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகியனவற்றுக்கும் இச்சட்டம் பொருந்தும். சம்மு காசுமீரைத் தவிர இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் ஒரு சட்டமாகும். சம்மு காசுமீரில் அம்மாநிலத்திற்கென தனி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Remove ads

ஆறு பட்டியல்கள்

இச்சட்டத்தில் ஆறு பட்டியல்கள் உள்ளன பட்டியல் I மற்றும் பட்டியல் II முற்றும் பாதுகாக்கப்பட்டவை இப்பட்டியல்களில் உள்ள உயிரினங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு இச்சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றது. எடுத்துக்கட்டாக புலிகள், காண்டாமிருகம், டால்பின், நீலத்திமிங்கலம் மற்றும் பனிச்சிறுத்தையை சொல்லலாம்.

பட்டியல் III மற்றும் பட்டியல் IV ல் உள்ள இனங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு சற்றுக் குறைவான தண்டனைகள் வழங்கப்படுகிறது. இவையும் பாதுகாக்கப்பட்டவையாகும்.எடுத்துக்கட்டாக புல்லி மான், கழுதைப்புலி, பிலமிங்கோஸ் மற்றும் குதிரைச்சுவடு நண்டுகளை சொல்லலாம்.

பட்டியல் V ல் உள்ள விலங்குகள் மட்டும் வேட்டையாட அனுமதிக்கப்படுகின்றன.

பட்டியல் VI ல் உள்ள தாவரங்கள், வளர்க்கத் தடை செய்யப்பட்டுள்ளன.

பிரிவு - 9 வேட்டையாடுதல்

இப்பிரிவின் மூலம் வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

வனவிலங்குகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு வனத்துறை, காவல்துறை, மத்திய புலனாய்வு பிரிவு, வனஉயிர் குற்றத்துடப்புத்துறை ஆகியோருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஏப்ரல் 2010 வரை இச்சட்டத்தின் கீழ் புலிகள் மரணம் தொடர்பாக மொத்தம் 16 குற்றவியல் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

Remove ads

வரையறைகள்

  • "விலங்குகள்l" நிலம், நீர்வாழ்வன, பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றௌம் இவற்றின் இளம் உயிரினங்கள் ஆகியவை விலங்குகள் என்ற சொல்லுக்கும் அடங்கும். மேலும், பறவைகள், ஊர்வனவற்றைப் பொறுத்தவரையில் அவற்றின் முட்டைகளும் இச்சொல்லுக்குள் அடங்கும்.
  • "விலங்குகள் சட்டப்பிரிவு"என்பது மண்புழுவைத் தவிர ஏனைய கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வனவிலங்குகள் முழுவதையுமோ அல்லது அவற்றின் பகுதிகள் பயன்படுத்துவதைக் குறிக்கும்.
  • ‘வேட்டை’ என்ற சொல்லில்,

(அ) கொலை, நச்சாக்குதல், பொறிவைத்தல், அல்லது எந்த காட்டு விலங்கையும் பிடிப்பது, மற்றும் இவ்வாறு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் வேட்டைக்குள் அடங்கும். (ஆ) துணை உட்பிரிவு (அ)வில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக எந்த எந்த காட்டு விலங்கையும் விரட்டுதலும் வேட்டைக்குள் அடங்கும்.

  • (இ), காயப்படுத்துதல், அழிக்க முயற்சித்தல் அல்லது எந்த ஒரு விலங்கின் உடல் பகுதியை எடுத்தல், அல்லது காட்டு பறவைகள், ஊர்வன போன்றனவற்றின் முட்டைகள், கூடுகள் முதலியவற்றை சேதப்படுத்துவதும் வேட்டையில் சேரும்.
  • ’பாடம் செய்தல்’ என்பது பதப்படுத்தல் , தயாரித்தல் அல்லது பதப்படுத்தப்பட்ட பொருள்களை பாதுகாத்தல் எனப்படும்
  • "பதப்படுத்தல்" என்பது மண்புழுவைத் தவிர ஏனைய கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வனவிலங்குகள் முழுவதையுமோ இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பாடம் செய்ய முயற்சிப்பதைக் குறிக்கும்.

(அ) கம்பளிகள், தோல்கள், மற்றும் மாதிரிகளுக்காக முழுவதுமாக அல்லது பகுதியாக பாடம் செய்தலை குறிக்கிறது.

(ஆ) மான் கொம்பு, ஆட்டுக் கொம்பு, காண்டாமிருகக் கொம்பு, இறகு, நகம், பல், கத்தூரி, முட்டைகள், கூடுகள் அனைத்தும் அடங்கும்.

  • பதப்படுத்தாத பாடப்பொருள்" என்பது மண்புழுவைத் தவிர முழு விலங்கு அல்லது அதன் பகுதி பாடம் செய்தலுக்கு முன்னரான உள்ள நிலையைக் குறிக்கிறது. புதியதாக கொல்லப்பட்ட விலங்கு, திமிங்கிலப் புனுகு, கத்தூரி, மற்றும் பிற பொருட்கள் இதில் அடங்கும்.
  • ’மண்புழு’ என்பது பட்டியல் 5 இல் சொல்லப்பட்ட இனங்கள்.

"வன உயிர்" விலங்குகள் ஈக்கள், பட்டாம்பூச்சிகள், கணுக்காலிகள், மீன்கள், அந்துப்பூச்சிகள், நீர் மற்றும் நில வாழ்வன உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.

Remove ads

வேட்டை (பிரிவு 9)

இப்பிரிவு வேட்டை என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் அளிக்கிறது. வன விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

உடைமை கொள்ளுதல் (பிரிவு 40-42)

வனவிலங்குகளை உடைமை கொள்ளுதல் மற்றும் உரிமம் பெறுதல் பற்றி இப்பிரிவு விவரிக்கிறது.

பிரிவு - 51 அபராதங்கள்

இப்பிரிவு, வனவிலங்குகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு வனத்துறை, காவல்துறை, மத்திய புலனாய்வு பிரிவு, வனஉயிர் குற்றந்துடைப்புத்துறை ஆகியோருக்கு அதிகாரம் வழங்குகிறது.

சட்டத்திருத்தங்கள்

1972 முதல் இன்று வரை பல முறை சட்டத்திருத்தங்கள் மேற்கோள்ளப்பட்டுள்ளன (1982, 1986, 1991, 1993, 2002, 2006, 2013, 2021, 2022)

மேலதிகத் தகவல்கள் வ. எண், சட்டத்தின் சுருக்க தலைப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads