வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயில்

தமிழ்நாட்டில் வரகூரில் உள்ள இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைணவக் கோயிலாகும்.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில், திருப்பூந்துருத்தியை அடுத்து 7 கி.மீ. தொலைவில் சென்று சாலையின் இடது புறம் அமைந்துள்ள நுழைவாயில் வழியே சென்றடையலாம்.

பெயர்க்காரணம்

பூபதிராஜபுரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இத்தலம், நாராயண தீர்த்தருக்கு, திருமால் வெண்பன்றியாகக் காட்சி தந்து வழிகாட்டியதால் வரகூர் எனப் பெயர் பெற்றது. நாராயண தீர்த்தருக்கு ஏற்பட்ட வயிற்றுவலியின் காரணமாக பல தலங்கள் சென்று கடைசியில் நடுக்காவேரி வரும்போது பெருமாள் அசரீரியாக இத்தலம் வந்ததாகவும், அவருடைய நோய் குணமடைந்ததாகவும் கூறுவர். நாராயண தீர்த்தர் இங்கேயே தங்கியிருந்து கண்ணனின் லீலைகளைப் போற்றிடும் கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற இசை நாட்டிய நாடகத்தை இயற்றியதோடு, இங்கு உறியடி உற்சவம் நடைபெறக் காரணமாக அமைந்தார்.[1]

Remove ads

மூலவர்

இக்கோயிலில் உள்ள மூலவர் லட்சுமி நாராயணர் ஆவார்.

உறியடி

இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். வரகூர் வெங்கடேசப் பெருமாளைக குலதெய்வமாகக் கொண்டவர்கள் இங்கு வந்திருந்து இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads