வரிக்கூத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரிக்கூத்து என்பது கூத்தின் இரு பிரிவுகளில் ஒன்றாகும். இது கதை தலைவன் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல் ஆகும். செய்யுள் பாடல்களைப்பாடி இவ்வாறு நடிப்பர். ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது வரிக்கூத்து எனப்படும்.[1]
இவ்வகைக்கூத்தில் மாதவி நடித்த அழகில் கோவலன் மயங்கியதாக என்று சிலப்பதிகாரம் [2] குறிப்பிடுகிறது. இது உடல் உறுப்புக்களால் எழுதிக் காட்டிக் காதலனின் காம உணர்வுகளைத் தூண்டும் காதலியின் கூத்து.
- கண்கூடுவரி - நெற்றியில் திலகம், விரிந்த கூந்தல், வில் என மை தீட்டிய கண், குவளைமலர் போலவும், குமிழ், கோவை பழங்கள் போலவும் புன்னகை பூக்கும் வாய் ஆகியவற்றால் பெருமிதம் மதமதக்கும் பார்வையால் பார்ப்பவர் கண்ணை இழுக்கும் கோலம். [3]
- காண்வரிக் கோலம் - விரிந்த கூந்தல் வானத்தில் நிலா முகம் காட்டி, பவள வாயில் முத்து விளங்க வா என்றதும் வந்து, போ என்றதும் போதல் [4]
- உள்வரி ஆடல் - தோழி முதலான அடுத்த பெண்போல் மாறுவேடம் போட்டுக்கொண்டு விளையாடுதல் [5]
- புன்புறவரி - காதலன் அணைக்கத் துடிக்கும்போது அறியாதவள் போல நடனமாடிக்கொண்டிருத்தல் [6]
- கிளர்வரிக் கோலம் - ஊடல் [7]
- தேர்ச்சிவரி - காதலன் பிரிந்து வாழும் காலத்தில் பிரிவைத் தாங்கமுடியாதவள் போலத் தன் உறவுக்காரர்களிடம் பசப்புதல் [8]
- காட்சிவரி - மாலைக் கோலத்துடன் மற்றவர்கள் முன் தோன்றுதல் [9]
- எடுத்துக்கோள் வரி - காதலன் நினைவால் மயங்கி விழுபவள் போல விழுதலும், மற்றவர்கள் தூக்கித் தேற்றுதலும் [10]
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads