வருவாய் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வருவாய் வட்டம் அல்லது தாலுகா என்பது இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில மண்டல துணை வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும், எழுத்தர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் (Taluk Office) எனப்படுகிறது.

Remove ads

பணிகள்

  • வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்கவும், அமைதிப்படுத்தவும் வேண்டும்.
  • நில உடைமையாளர்களுக்கு உரிய பட்டா, சிட்டா, அடங்கல், நில ஆவணங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவ்வலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
  • மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
  • தங்கள் வருவாய் வட்டப் பகுதியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உதவிட வேண்டும்.
  • பேரிடரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வகை செய்ய வேண்டும்
Remove ads

இதையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads