வர்கலா கடற்கரை

From Wikipedia, the free encyclopedia

வர்கலா கடற்கரை
Remove ads

வர்கலா கடற்கரை (Varkala Beach) பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்பட்டுவருகிறது. இது இந்தியாவில் உள்ள, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியானஅரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. பாபநாசம் என்னும் வார்த்தையின் பொருள், பாவங்களை துளைத்தல் என்று பொருள். இக்கடலில் நீராடுவதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.

Thumb
சூரிய அஸ்தமனம் (வர்கலா)
Thumb
இயற்கை ஊற்று (வர்கலா)
Remove ads

பார்த்து ரசிக்க வேண்டிய காட்சிகள்

கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் சிறுமலைக்குன்றுகளுக்கு மிக அருகாமையில் அல்லது ஒட்டிய கடற்கரை பரப்பு வர்கலா கடற்கரை.[1] இங்கு உள்ள குன்றுகள் மூன்றாம் நிலை படிவப்பாறைகளால் உருவானவை. இது கேரள கடலோரப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள தனித்துவமான புவியியல் அம்சமாகும் என புவியியல் வல்லுனர்களால் இந்திய புவியியல் ஆய்வுத்துறை வாயிலாக வர்கலாவின் அமைப்பை பற்றிய முடிவை வெளியிட்டுள்ளனர். இக்குன்றுகள் எண்ணற்ற இயற்கை நீர் ஊற்றுக்களும், தாதுக்களும் கொண்டிருக்கிறது. இக்கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற சொர்க்கபுரியாகும். அந்திசாயும் பொழுதை இங்கிருந்து காண்பது மற்ற இடங்களை காட்டிலும் மதிப்புமிக்க காட்சியாக இருக்கும். மலை குன்றுகளின் மேல் நடைபாதை சாலையின், ஒருபுறம் தங்கும் விடுதிகளும், உணவகங்களும், சிற்றுண்டி கடைகளும், இருக்க மறுபுறம் குன்றின் கீழ் நீல கடற்கரை. நடைபாதையில் நடந்துகொண்டே கீழே கடலின் அழகினை ரசிக்கலாம். மேலும் பாபநாசம் கடற்கரைக்கு அருகிலும் சுற்றுவட்டாரத்திலும் உணவகங்களும், தங்கும் விடுதிகளும் அதிகமாக உள்ளன. இக்கடற்கரை ஒய்வுக்காக வருபவர்களையும், இயற்கையையும் அதன் ரம்மியத்தை ரசிக்கவருபவர்களையும், மற்றும் மத ஈடுபாட்டுடன் வருபவர்களையும் ஒரு சேர ஈர்க்கிறது.

Remove ads

அருகில் உள்ள இடங்கள்

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனார்தனன் சுவாமிகள் கோவில் மற்றும் புகழ்மிகு சிவகிரி மடம் போன்றவை வர்கலாவிற்கு அருகாமையிலுள்ள முக்கிய இடங்களாகும். வர்கலாவில் உள்ள இரயில் நிலையத்திற்கு வர்கலா சிவகிரி இரயில்நிலையம் என இன்னொரு பெயரும் உள்ளது.

வர்கலா கடற்கரை குன்றின் பரந்த காட்சி

நில அமைவிடம்

வர்கலா அமைவிடம் 8.73°N 76.71°E / 8.73; 76.71.[2]

நிகழ்படம்

வர்கலா கடற்கரையின் காணொளி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads