வலைப் பந்தாட்டம்
இலங்கை From Wikipedia, the free encyclopedia
Remove ads
வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஓர் பந்து விளையாட்டு ஆகும்.இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் துவக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 1890களில் இது ஓர் முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது.அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது.பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது. விளையாட்டின் நோக்கம் எதிரணியின் கூடையில்,பந்தை எடுத்துச் சென்று எறிந்து கோல் இடுவதாகும். அணியின் வீரர் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட செயலாற்றும் வகையில் "இடங்கள்" வரையறுக்கப்படுள்ளன. அவற்றிலிருந்து அவர்களது நகர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆட்டத்தின்போது பந்தைக் கையாளும் வீரர் மற்றொருவருக்கு பந்தை கைமாற்றுமுன் ஒரு எட்டுதான் எடுக்க முடியும். பந்தை மூன்று நொடிகளுக்கு மேலாக கைமாற்றாது வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட முன்னணி வீரர்கள் மட்டுமே கோல் எறிய முடியும். 60 நிமிடங்கள் நடக்கும் ஆட்டம் பதினைந்து நிமிட இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆட்ட இறுதியில் கூடுதல் கோல்கள் இட்ட அணியினர் வெற்றி பெறுவர்.
70 நாடுகளில் 20 மில்லியன் மக்களுக்கும் கூடுதலானவர் விளையாடுவதாகக் கூறப்படும் இவ்விளையாட்டினை பன்னாட்டு வலைப்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு(IFNA)உலகளவில் கட்டுப்படுத்தி வருகிறது.
Remove ads
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads