வல்லநாட்டு செட்டியார்
ஒரு சாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லநாட்டு செட்டியார் (Vallanattu Chettiar) எனப்படுவோர் இந்திய மாநிலமான, தமிழகத்தில் வாழுகின்ற ஓர் நகரத்தார் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] இவர்களை வல்லநாட்டு நகரத்தார் செட்டியார் என்றும் அழைப்பர்.
இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகிலுள்ள வல்லநாடு என்னும் கிராமத்தில் உள்ளனர். இந்த திருவரங்குளம் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும்.
திருவரங்குளம் கோயில் வல்லநாட்டு செட்டியார்களின் பிரதான கோயிலாகும்.
வல்லநாட்டு செட்டியார் சமூகம் 12 கிராமப் பிரிவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த கிராமப் பிரிவு 3 சீமை என பிரிக்கப்பட்டுள்ளது:
- மேல்முகம் (மேல சீமை) (கீரனூர், ஆரியூர்,அன்னவாசல், வல்லநாடு)
- நடுமுகம் (நடுசீமை) (ஆலங்குடி, மறமடக்கி, வடகாடு, கறம்பக்குடி )
- கீழ்முகம் (கீழ சீமை) (நெடுவாசல், நெய்வேலி, பிலாவிடுதி, காடுவெட்டுவிடுதி)
Remove ads
பாரம்பரிய தோற்றம் மற்றும் பிற செட்டியரிடமிருந்து வேறுபாடுகள்
முற்காலத்தில் வல்லநாட்டு செட்டியார்கள் தனித்துவமான தோற்றமளிப்பவர்களாக இருந்தனர். ஆண்கள் காதுகளில் பெரிய பதக்கம் கொண்ட கடுக்கண்களை அணிபவர்களாகவும், பெண்கள் காதுகளை வளர்க்கும் விதமான அதிக எடை கொண்ட தண்டட்டிகளை அணிந்தனர்.[2] இவர்கள் திருவாதிரை நோன்பு விழாவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இனிப்பு அடை (ஒரு வகையான தோசை) செய்து, பூசை அறையில் கோலம் இட்டு, பிராத்தனை செய்கின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads