வளம்குன்றா வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு - 2012
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வளம்குன்றா வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு 2012 (United Nations Conference on Sustainable Development) அல்லது பொதுவாக ரியோ+20 (Rio 2012) என்பது 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பூமி உச்சி மாநாடு எனப் பொதுவாக அறியப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தொடர்ச்சியாக அம்மாநாடு நடந்து சரியாக 20 ஆண்டுகள் கழித்து, 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடாகும். இம்மாநாடு ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இம்மாநாட்டை 2012 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடத்துவதென 2009 திசம்பர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானித்தது[1]. இத்தீர்மானத்தின் படி 2012 ரியோ பூமி மாநாடு சூன் 20 முதல் சூன் 22 வரை நடைபெற்றது.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads