வளர்ந்துவரும் நாடுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ளன.[2][3]
ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள் புதிதான ஒரு சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன[4][5][6][7].



மிக உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்
உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்
நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண் |
குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்
தரவுகள் கிடைக்காதவை |
Remove ads
வரைவிலக்கணம்
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான் வளர்ந்த நாடுகள் என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறினார். "வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல்|சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்"[8].
ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை.[3]. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.[9].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads