வளைவு (கட்டிடக்கலை)

From Wikipedia, the free encyclopedia

வளைவு (கட்டிடக்கலை)
Remove ads

கட்டிடக்கலையில் வளைவு என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஓர் அமைப்பு ஆகும்.[1] இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும்.

Thumb
சென். பீட்டர்ஸ்பேர்க்கின் அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும், பொது அதிகாரிகள் கட்டிடத்திலூள்ள வளைவு
Thumb
சங்கிலித்தோப்பு வளைவின் ஒரு தோற்றம்
Thumb
ஒரு கட்டிட கட்டுமான வளைவு 1. கட்டிடக்கலை - வளைவு முட்டுக்கல் 2. விதான ஆப்புக்கல் 3. கவான்புறம் 4. விற்கம்பத்தொப்பி 5. கவானகம் 6.  ஏற்றம் 7. தெளிவு இடைத்தூரம் 8. தாங்கி நிற்கும் கட்டுமானம்
Remove ads

வளைவு அமைப்புமுறையின் தோற்றம்

கட்டிடக்கலை பயன்பாட்டில் உள்ள வளைவுகள் என்ற சொல், நிலவறைகள் அல்லது காப்பறைகளில் கட்டப்படும் கவிந்தகூரைகளுக்கு ஒத்ததாக கணிக்கப்படுகிறது. ஆனால் காப்பறைகளின் கவிந்தகூரை என்பது, ஒரு கூரையை உருவாக்கும் தொடர்ச்சியான வளைவுகளின் தொகுப்பு என்று வேறுபடுத்தப்படுகிறது.[2]

கி.மு. 2 ஆம் நூற்றாண்டில், மெசொப்பொத்தேமியாவின் (Mesopotamian) கட்டிட வேலைகளில் செங்கல் கட்டுமான வளைவுகள் தோன்றின.[3]

கட்டிடக்கலையில் பல்வேறு வகை வளைவுகளின் முறையான தொழில்நுட்ப கட்டமைப்பு பயன்பாடானது, பண்டைய ரோமானியர்கள் காலத்தில் தொடங்கியது,

Remove ads

வளைவு அமைப்புமுறையின் வளர்ச்சி

இந்த முறைமை புழக்கத்துக்கு வருவதற்கு முன்னர் இரண்டு தூண்களுக்கிடையில் அல்லது சுவரிலுள்ள துவாரங்களுக்கு மேல் சுமைகளைத் தாங்குவதற்காக உத்தரங்களைப் (beams) பயன்படுத்தினார்கள். பின்னர் குறிப்பிட்ட முறையில், அக்காலத்தில் உத்தரங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருந்த மரம், கற்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி, உத்தரத்தைத் தாங்கும் இரண்டு தூண்கள் அல்லது வேறுவகையான தாங்கும் புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தைக் குறிப்பிட்ட அளவுக்குமேல் அதிகரிக்க முடியாதிருந்தது. இதற்குக் காரணம், இரண்டு தூண்களுக்கு இடையே பளுவைத் தாங்கப் பயன்படுத்தப்படும் உத்தரம், அதன் சொந்த நிறையினாலும், அதன்மீது சுமத்தப்படும் வேறு பல சுமைகளினாலும் கீழ்நோக்கி வளைய முற்படுகின்றது. இதனால் உத்தரத்தின் கீழ்ப்பகுதியில் வெடிப்புக்கள் உருவாகி அது உடைந்துவிடுகிறது. மேலும்,, தூண்களிடையேயான தூரத்தை அதிகரிக்கும்போது, தூரத்திற்கேற்றவாறும் அதன் மீது நிறுத்தப்படும் பொருள்களின் எடையைத் தாங்கக் கூடியவாறும் உறுதியான பருமனுள்ள உத்திரங்களை அமைப்பது அவசியமாகின்றது. இதற்குரிய பெரிய அளவிலான மரம், கல் முதலியனவும் கிடைத்தற்கு அரியதாகிவிடுகின்றன. இத்தகைய குறைபாடுகளே வளைவு அமைப்புமுறை விரிவாக்கம் அடைவதற்கு காரணமாகக் கருதப்படுகிறன.

Thumb
வளைவொன்றின் முப்பரிமாணத் தோற்றப்படம்

வளைவுகளின் கட்டுமானத்தில் அளவில் சிறிய செங்கற்கள், அல்லது வேறுவகைக் கற்களே பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இதன் வளைந்த வடிவம் காரணமாக அதை உருவாக்கிய கற்கள் ஒன்றுடன் ஒன்று அழுத்திக்கொண்டு இருப்பதால் அதில் வெடிப்பு உண்டாகாது. மேற்குறிப்பிட்ட கட்டிடப்பொருட்கள் அதிக அழுத்தத்தைத் தாங்கக் கூடியவையாக இருந்ததால் வளைவுக் கட்டுமான முறைமை ஒரு சிறந்த கட்டுமான முறையாகக் கருதப்பட்டது.

வளைவுகளைக் கட்டும் முறைபற்றி பண்டைக்கால பபிலோனியர், எகிப்தியர், அசிரியர் போன்றோர் அறிந்திருந்தார்கள். எனினும் அவர்கள் இந்த நுட்பத்தை நிலத்தடி வடிகால்கள் போன்ற முக்கியமில்லாத கட்டுமானங்களிலேயே பயன்படுத்தினர். இந்த முறைமையைச் செம்மைப்படுத்தி சிறப்புக்குரிய கட்டிடக்கலைக் கூறாக்கிய பெருமை உரோமரையே சாரும். இவர்களுக்குப் பின்னர் வளைவுகளின் வடிவங்களில் பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டன.

Remove ads

வளைவின் வகைகள்

வளைவுகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் அவற்றின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன அவை:

  1. வட்ட வடிவமான வளைவுகள்
  2. கூர்மையான வளைவுகள்
  3. பரவளைய அமைப்பு உடைய வளைவுகள்

கட்டிடங்களில், கவிமைமாடங்களையும், வில் வளைவுகளையும், வடிவமைக்கவும், உருவாக்கவும் வளைவுகள் கட்டமைப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[4]

சுழற்சி வடிவில் உள்ள வளைவுகள் வட்ட வடிவமான வளைவுகள் என்றும் குறிப்பிடப்படுகின்ன்றன. இவை பண்டைய கட்டிடவியலார் வடிவமைத்த, கனரக கட்டுமான வேலைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.[5]

பண்டைய ரோமானிய கட்டிடவியலார் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சார்ந்திருக்கும் பெரிய, திறந்த பகுதிகளைக் கடந்து வட்ட வடிவிலான வளைவுகள் அமைப்பதை பெரிதும் விரும்பினர். பல வட்டமான வளைவுகள், தொடக்கம் முதல்-இறுதிவரை வரிசையாக, ஒரே மட்டத்தில் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டன. மேலும், ரோமானிய நீர்க்குழாய்கள் போன்ற சாலகம் எனப்படும் பல மேல்வளைவுத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.[6]

கூரான பற்கள் போன்ற கூம்புமுடி வளைவுகள் பெரும்பாலும் கோதிக் (Gothic)-பாணி கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன.[7]

ஒரு வட்ட வடிவமான வளைவுக்குப் பதிலாக ஒரு கூர்மையான வளைவைப் பயன்படுத்துவதன் மூலம், வளைவுச் செயல்பாட்டு அழுத்தம் கட்டிடத்தின் அடித்தளத்தில் குறைவான உந்துதல் விசையைக் கொடுக்கிறது. எனவே கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த கண்டுபிடிப்பு கோதிக் கட்டிடக்கலைக்கு மிகக் குறைந்த அடித்தளமும், குறுகிய நெருக்கமான இடைவெளி திறப்புகளும் அமைக்க வழி வகுத்தது.[8][9]

மாறுபட்ட வளைவுகளின் வரைபட வடிவமைப்புகள் 

மாறுபட்ட வளைவுகளின் வரைபட வடிவமைப்புகளில் சில கீழே காட்டப்பட்டுள்ளன.

Remove ads

வளைவுகளின் வரலாறு

கச்சோர் மற்றும் தண்டய வளைவுகள், கயிறு வளைவுகளுக்கு எதிரிடையான உண்மையான வளைவுகள் ஆகும். இவை பண்டைய கிழக்கிந்திய மற்றும் லெவந்திய (Levant) நாகரீகங்களால் நன்கு அறியப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் பயன்பாடு அடிக்கடி நிகழாததாக இருந்தது.

  • பெரும்பாலும், சாக்கடை நீர் போன்ற கழிவுத் திரவங்கள் வெளியேறுவதற்கான நிலத்தடி குழாய் கட்டமைப்புகளுக்கு மட்டுமே வளைவு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வகைக் கட்டுமானங்களில் பக்கவாட்டு உந்துதல் பிரச்சினை மிகவும் குறைந்து காணப்பட்டது.[10]
  • இன்றைய இஸ்ரேலின் வளைகுடா நகரான அஸ்கலோனில் (Ashkelon) உள்ள கி.மு. 1850ஆம் ஆண்டின் வெண்கலக் கால வளைவு நுழைவாயில் இவற்றில் ஓர் அரிதான விதிவிலக்காகும்.[11]
  • கிரேக்க நாட்டின் ரோடெஸ் (Rhodes) நடைப்பாலம் ஆரம்ப கால வளைவு வவுஸ்சோயர் ( voussoir) கட்டுமான முறைக்கு ஓர் உதாரணம் ஆகும்.[12]
  • முற்கால ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கோர்பெல் (Corbel) வளைவுகள் காணப்பட்டன.
  • 2010 ஆம் ஆண்டில், குவெட்ஸால்கொட்ல் (Quetzalcoatl) எனும் பிரமிடுக்கு அடியில் ஒரு நீண்ட வளைந்த கூரையுடன் கூடிய நடைபாதை இருப்பது இயந்திர மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மெக்ஸிக்கோ நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பழமையான தியோட்டிஹுயாகன் (Teotihuacan) நகரில் உள்ளது. இது கி.மு. 200 ஆண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது.[13]
  • பண்டைய பெர்சியாவில், அகேமனிட் (Achaemenid) பேரரசு சிறிய உருளை வடிவ கொள்கலன்களைக் கொண்ட கவிமைமாடங்களைக் கட்டியது. இவை இவான் (iwan) என்று அறியப்படுகின்றன. இவை தொடர்ச்சியாகக் கட்டப்பட்ட வளைவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மண்டபங்கள் ஆகும். இவை பிற்காலத்தில் பார்த்தியப் (Parthian) பேரரசின் மிகப்பெரிய, நினைவுச்சின்ன அமைப்புகளாக மாறின.[14][15][16]
  • இந்த கட்டிடக்கலைப் பாரம்பரியம் சாஸானியப் (Sasanian) பேரரசு காலத்திலும் தொடர்ந்தது. இக்கலையானது, 6 வது நூற்றாண்டில் க்டிசிபோனில் (Ctesiphon) தக் கஸ்ராவைக் (Taq Kasra) கட்டக் காரணமானது. இதுவே நவீன காலங்கள் வரையிலும், சுதந்திரமாகத் தனித்து நிற்கும் மிகப்பெரிய கவிமைமாடம் ஆகும்.[17]
  • ஐரோப்பாவில் ரோமானியர்கள் முதன்முதலாக வளைவு கட்டிடக்கலையை உருவாகக் காரணமாக இருந்தனர். உலக அளவிலும் இவர்களே முதன்மையானவர்கள். இவர்கள், கவிமைமாடங்கள், குவிமாடம் எனும் குவிமுக மாடங்களின் அனுகூலமான மேன்மையான, பயன்தரு புலங்களை உணர்ந்துநுகர்ந்து பாராட்டி வந்தனர்.[18]
  • முதன்முதலில், வளையக்கூறுகளாலான வளைவுகள் ரோமர்களால் கட்டப்பட்டன. ஒரு பாலம் கட்டும்போது, அதில் அமைக்கப்படும் வளைவுகள் அல்கோனேடர் (Alconétar) பாலம் அல்லது பொன்டே சான் லோரென்சோ (Ponte San Lorenzo) பாலம் போன்றவற்றில் இருப்பது போன்று அரை வட்ட வடிவில் இருக்க வேண்டியதில்லை என்று உணர்ந்தனர்.[19][20]
  • இலக்கியத்தில் இருந்தும், கல்லில் செதுக்கப்பட்ட சித்தரிப்பு விளக்க ஓவியத்திலிருந்தும், பண்டைய சீனாவில், பெரும்பாலான கட்டிடங்கள் மரத்தினால் உருவாக்கப்பட்டவையாக இருந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.[21][22][23]
Remove ads

படத்தொகுப்பு

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads