மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம்

From Wikipedia, the free encyclopedia

மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம்
Remove ads

வாக்கா அரங்கம் (WACA Ground, /ˈwækə/) மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் உள்ள விளையாட்டரங்கம் ஆகும். இந்த அரங்கத்தின் பெயர் இதன் உரிமையாளர்களும் இயக்குபவர்களுமான மேற்கு ஆத்திரேலிய துடுப்பாட்ட சங்கத்தின் ஆங்கில முதலெழுத்துக்களின் தொகுப்பாகும்.

விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...

வாக்கா அரங்கம் 1890களிலிருந்து மேற்கு ஆத்திரேலியாவின் "துடுப்பாட்டத் தாயகமாக" விளங்குகின்றது. 1970–71 தொடர் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இங்கு ஆடப்படுகின்றது.[1] இந்த அரங்கம் மேற்கு ஆத்திரேலியாவின் முதல்தரத் துடுப்பாட்ட அணியான வெஸ்டர்ன் வாரியர்சின் தாயக அரங்கமாக விளங்குகின்றது. தவிரவும் மகளிர் தேசிய துடுப்பாட்ட கூட்டிணைவு அணிக்கும் வெஸ்டர்ன் ஃபூரி அணிக்கும் தாயக அரங்கமாக விளங்குகின்றது. பிக் பேஷ் லீக் ஆட்டங்களில் பேர்த் இசுகார்ச்சர்சு அணி இங்கு விளையாடுகின்றது; இந்த ஆட்டங்களில் இந்த அரங்கம் #உலை எனக் குறிப்பிடப்படுகின்றது.

வாக்காவிலுள்ள துடுப்பாட்ட ஆடுகளம் உலகில் மிகவும் விரைவான, எழும்புகின்ற தன்மையுடையதான ஆடுகளங்களில் ஒன்றாக உள்ளது. ஆடுகளத்தின் புறப்பரப்பும் பந்து விரைந்தோடுமாறு உள்ளது. இக்காரணங்களாலும் மதியத்திற்குப் பின்னர் வீசும் கடற்காற்றாலும் இந்த அரங்கம் விரைவுப் பந்து வீச்சாளர்களுக்கும் துயல்பந்து வீச்சாளர்களுக்கும் விருப்பமான அரங்கமாக உள்ளது. இந்த அரங்கத்தில் மிகவும் விரைவாக ஓட்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன – திசம்பர் 2014 நிலவரப்படி, மிக விரைவாக அடிக்கப்பட்டுள்ள தேர்வு நூறுகளில் நான்கு வாக்காவில் அடிக்கப்பட்டுள்ளன.[2]

துடுப்பாட்டத்தைத் தவிர இந்த அரங்கம் தடகள விளையாட்டுகள், அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், சங்கக் கால்பந்து, இரக்பி லீக், இரக்பி யூனியன் போன்ற பிற விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது; ஆனால் அண்மைக்காலங்களில் இந்த விளையாட்டுக்கள் மாற்று அரங்கங்களில் ஆடப்படுகின்றன. பல முன்னணி இசைக் கச்சேரிகளும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads