வாசோபிரெசின்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாசோபிரெசின் (Vasopressin) இயக்குநீர், ஆண்டிடையூரிடிக் இயக்குநீர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சிறுநீரகக் குழல்களில் செயல்பட்டு, நீர், நம் உடலில் நிறுத்திக் கொள்கிறது. இது, நெப்ரானின் சேய்மை சுருண்ட குழல் மற்றும் சேகரிக்கும் குழல்கள் மீது செயல்பட்டு, சிறுநீரக வடிதிரவத்திலிருந்து நீர் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. இது எல்லா இரத்தக் குழல்களையும் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது யூரியாவை நிறுத்தி வைக்கிறது. இந்த ஹார்மோனின் குறைவால் டையாபெடீஸ் இன்சிபிடஸ் என்னும் நீரிழிவு நோய் தோன்றுகிறது. இந்நோய் கண்டவர்கள், அதிக அளவில் சிறுநநீர் வெளியேற்றுவார்கள் (பாலியூரியா). இதனைத் தொடர்ந்து அதிக அளவில் தாகம் கொண்டு பெருமளவு தண்ணீர் அருந்துவார்கள் (பாலிடிப்ஸியா).[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads