வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்

From Wikipedia, the free encyclopedia

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்
Remove ads

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம் அல்லது வாட் பிர கேவ் (Wat Phrasri Rattana Sasadaram or Wat Phra Kaew), தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரின் மிக அழகானதும், புனிதமானதுமான மரகதக்கல் புத்தர் சிலை அமைந்துள்ள கோயில் ஆகும்[1] இந்த பௌத்த அடுக்குத் தூபி தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் அரணமையில் அமைந்துள்ளது. இப்அடுக்குத் தூபிவில் பிக்குகள் தங்குவதில்லை.

Thumb
மரகத புத்தர் கோயில்
Thumb
கோயில் காப்பாளர்களான கிண்ணரர்கள்

தாய்லாந்து நாட்டு மன்னர் மட்டுமே மரகதக் கல்லிலான புத்தரின் சிலை அருகே செல்ல இயலும். ஆண்டிற்கு மூன்று முறை புத்த சிலையின் துணி மன்னரால் மாற்றி உடுத்தப்படுகிறது.

தாய்லாந்து மன்னர் முதலாம் இராமாவால் இக்கோயில் கட்டப்பட்டது. [1] கி பி 1552இல் கம்போடியர்கள், போரில் தாய்லாந்து நாட்டை வென்ற போது, இக்கோயிலின் மரகதப் புத்தர் சிலையை லாவோசில் நிறுவி 214 ஆண்டுகள் வழிபட்டனர். பின்னர் தாய்லாந்து மன்னர் கம்போடியா மீது படையெடுத்து லாவோசில் இருந்த மரகதப் புத்தர் சிலையை மீட்டு, 1784இல் அதனை பாங்காக் நகரத்தில் நிறுவினார். இக்கோயில் ஒவ்வொரு ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரமைக்கப்படுகிறது.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads