வானொலி

From Wikipedia, the free encyclopedia

வானொலி
Remove ads

வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து சத்த ஒலிபெருக்கி ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Thumb
An audio signal (top) may be carried by an AM or FM radio wave.
Thumb
1930 ஆண்டளவில் பயன்படுத்தப்பட்ட வானொலிப் பெட்டி அல்லது வானொலி வாங்கி
Thumb
The Alexandra Palace, here: mast of the broadcasting station
Thumb
Classic radio receiver dial
Remove ads

வானொலி நிலையங்கள்

  • சென்னை வானொலி நிலையம்,
  • திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்,
  • திருநெல்வேலி வானொலி நிலையம்,
  • கோயம்புத்தூர் வானொலி நிலையம்,
  • கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்,
  • மதுரை வானொலி நிலையம்,
  • நாகர்கோவில் வானொலி நிலையம்,
  • உதகமண்டலம் வானொலி நிலையம்,
  • தூத்துக்குடி வானொலி நிலையம், உள்ளன .
Thumb
Rooftop television antennas. Yagi-Uda antennas like these six are widely used at VHF and UHF frequencies.

வானொலி ஒலிபரப்பு தத்துவம்

ஒரு வானொலி நிலையத்தில், ரேடியோ அலைகளை உருவாக்கி, பின் அவைகளை ஒலி அலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம் பரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி உருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை (Morse – Code Signal) மட்டும் பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி உருவாக்கப்பட்டது.[1]

வகைகள்

அ. ஊர்தி அலைப்பரப்பி (Carrier wave transmitter )

ஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter)

இ. வானொலி தொலைபேசி பரப்பி (Radio Telephone Transmitter)

ஊர்தி அலைப்பரப்பிகள் பழைய வகை பரப்பிகள் ஆகும். அவைகள் துண்டுச் சிக்னல்களை மட்டும் (Morse Signals) பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. துண்டு சிக்னல்கள் புள்ளிகளையும் (dots) சிறிய கோடுகளையும்( dashes) கொண்டது. ஆனால் வானொலி பரப்பிகள் ரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம் ((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என பிரிக்கப்படுகின்றன.[1]

Remove ads

வீச்சு மாற்றி வானொலி பரப்பி (Am Radio transmitter)

இந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது கீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது.[2]

வானொலி அதிர்வெண் அலையாக்கி

இது ஊர்தி அலைகளை உற்பத்தி செய்கிறது. வெப்பநிலை மற்றும் மின்னழுத்த வேறுபாடுகள் ஆகியவற்றினால் இது உற்பத்தி செய்யும் அதிர்வெண் மாறாதவாறு வடிவமைக்கப்படுகிறது. அதற்கு கிறிஸ்டல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதற்கு கிறிஸ்டல் ஆசிலேட்டர் என்ற பெயரும் உண்டு. பஃபர் ஆம்ப்ளிஃபையர் (Buffer Amplifier)

இது ஒரு இம்பிடன்ஸ் பொருந்தும் கிளாஸ் ஏ (Class) ஆர்.எஃப் ஆம்ப்ளிஃபையர் ஆகும். இது ஆர்.எஃப் ஆசிலேட்டர் நேரடியாக அவுட்புட் நிலையுடன் பளு ஆவதைத் தடுக்கிறது. இதனால் ஆர்.எஃப் அதிர்வெண் மாறிலியாகக் (Constant) கிடைக்கிறது.

இண்டர் - மீடியேட் பவர் ஆம்ப்ளிஃபையர் இதுவும் ஒரு கிளாஸ் ஏ ஆம்ப்ளிஃபையராகும். இது பஃபர் மற்றும் மாடுலேட்டர் பகுதிகளை இணைக்கிறது. இது ஊர்தி அலையின் திறனைப் பெருக்குகிறது.

ஒலிவாங்கி (Microphone) இது ஒரு சக்தி மாற்றும் சாதனம் (Transducer) ஆகும். இது ஒலியை, ஒலி மின்னலைகளாக (Audio Signals)) மாற்றுகிறது.

முன்பெருக்கி (Pre Amplifier) முதலில் ஒலி மின்னலைகளில் உள்ள இரைச்சல் வடிகட்டப்பட்டு, பின்பு பெருக்கப்படுகிறது.

செவி உணர்வு அதிர்வெண் பெருக்கி ((AF Amplifier) இது ஒலி மின்னலைகளின் திறனைப் பெருக்குகிறது. பெருக்கிய பின், மாடுலேட்டர் மற்றும் ஆர்.எப் பவர் ஆம்ப்ளிஃபையர் பகுதிக்குக் கொடுக்கிறது.

மாடுலேட்டர் மற்றும் ஆர்.எஃப் பவர் ஆம்ப்ளிஃபையர்

இங்கு ஒலிமின்னலை மற்றும் ஊர்தி அலைகள் வீச்சுப்பண்பேற்றம் (Ampliitude Modulation)) செடீநுயப்படுகிறது. பண்பேற்றப்பட்ட அலைகள், கடைசி நிலை ஆர்.எப் பவர் ஆம்ப்ளிபையரினால் மிக அதிக அளவில் பெருக்கப்பட்டு, பரப்பும் ஆண்டெனாவிற்குத் தரப்படுகிறது.

பரப்பும் ஏரியல் (Transmitting Antenna) இது பண்பேற்றப்பட்ட அலைகளை மின்காந்த அலைகளாக ((Electromagnetic waves) மாற்றி, வான்வெளியில் பரப்புகிறது.

பண்பலை பரப்பி (FM Transmitter)

இந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செய்து அவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும் கொண்டுள்ளது.[2]

1. ஹகு பெருக்கி (AF amplifier) 2. பிரி – எம்பசிஸ்( Pre – emphasis) 3. கிறிஸ்டல் அலையாக்கி (Crystal – Oscillator) 4. அதிர்வெண் மடங்காக்கி (Audio processing stage) 5. ரியாக்டன்ஸ் - பண்பேற்றி (Audio processing stage) 6. பவர் பெருக்கி

ஒலி – அலை தயாரிப்பு பகுதி (Audio processing stage)

இப்பகுதி ஒலி வாங்கியையும், பிரி-எம்பசிஸ் மற்றும் ஹகு பெருக்கியையும் கொண்ட பகுதியாகும். முதலில் ஒலி வாங்கியின் மூலம் பெறப்பட்ட ஒலியானது, மின் அலையாக மாற்றப்பட்டு, பின்பு ஹகு ஆம்பிளிபயரின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரி – எம்பசிஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் அதிர்வெண் ஒலி அலைகள் இரைச்சலால் அதிகம் பாதிக்கப்படுவதால், இதனை நீக்க இவ்வலையின் வீச்சானது பெருக்கப்பட்டு மறுப்புப் பண்பேற்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பிரி-எம்பசிஸ் எனப்படும். இவ்வாறு பெருக்கப்பட்ட இவ்விரைச்சல் அலை ரிசீவரில் டி –எம்பசிஸ் என்ற சுற்றின் மூலம் மிக எளிமையாக நீக்கப்பட்டு விடும்.

மறுப்புப் பண்பேற்ற பகுதி (Reactance Modulator)

இப்பகுதி கிறிஸ்டல் அலையாக்கி, அதிர்வெண் மடங்காக்கி மற்றும் மறுப்பு பண்பேற்றப் பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் பயன்படுத்தப்படும் காயில் அல்லது மின்தேக்கியின் ரியாக்டன்ஸ், வருகின்ற ஒலி அலையின் அளவிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு பண்பேற்றத்திற்கு தேவையான உயர் அதிர்வெண் ஊர்தி அலைகளை, கிறிஸ்டல் அலையாக்கி உற்பத்தி செய்து தரும். இவ்வூர்தி அலைகளின் அதிர்வெண் மடங்காக்கியின் மூலம் பெருக்கப்பட்டு பவர் பெருக்கி பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

பவர் பெருக்கி மற்றும் ஒலிபரப்பு ஏரியல்

பண்பேற்றம் நிகழ்த்தப்பட்ட ஒலிஅலையானது அதன் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் ஆகிய இரு முறைகளிலும் பெருக்கப்பட்டு ஒலிபரப்பு ஆண்டெனாவிற்கு அனுப்பப்படுகிறது. பரப்பும் ஆண்டெனாவானது RF அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வெளியில் பரப்புகிறது.

Remove ads

வானொலியின் பயன்கள்

கப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது .[3]

முதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன்படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது .

இன்று, வானொலி பல வகையான வடிவங்களில், வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து வகையான மொபைல் தகவல்தொடர்புகள், ரேடியோ ஒளிபரப்பும் அடங்கும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பாக, வணிக ரீதியான வானொலி ஒலி பரப்புகள் செய்தி மற்றும் இசை மட்டுமல்லாமல் , நாடகங்கள், நகைச்சுவை, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்குகள் வழங்கின .1920 களின் பிற்பகுதி முதல் 1950 களின் இடைப்பட்ட காலம் வரை பொதுவாக வானொலியின் பொற்காலம் எனலாம் . வானொலி என்பது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவமக விளங்கியது .

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. கல்வி சேவை , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , போன்றவற்றை வழங்குகின்றன .

இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.

Remove ads

ரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி

ரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார்[4] "கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது.[5]

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads