வான் ஆளுமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வான் ஆளுமை (Air Supremacy) வான்படைகளுக்கிடையேயான் போரில் ஒரு நாட்டின் வான்படை எதிரி நாட்டு வான்படையின் மீது முழு அதிக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கும். நேட்டோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வரையறையின் படி "எதிரி நாட்டு வான்படை எந்த பயனுடைய குறுக்கீடும் செய்ய இயலாத நிலை”யை அடைவது வான் ஆளுமை நிலையை அடைவதாகக் கருதப்படுகிறது.[1][2][3]
பொதுவாக போரியலில் வான்படைப் போர் நிலவரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:
- வான் சமநிலை (Air Parity) : இரு தரப்பு வான்படைகளும் சமமான பலமுள்ளவையாக உள்ள நிலை. வான்படைகளால் தமது நாட்டு வான்வெளியில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியும்
- வான் ஆதிக்கம் (Air Superiority) : ஒரு தரப்பு வான்படைக்கு ஓரளவு சுதந்திரமாக எதிரி நாட்டு வான்வெளியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். ஆனால் எதிர் தரப்பு வான்படையின் தலையீட்டால் இழப்புகள் நேரலாம்.
- வான் ஆளுமை (Air Supremacy) : ஒரு தரப்பு வான்படைக்கு பொர்க்களத்தின் அனைத்து வான்பகுதிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் வன்மை கிட்டுகிறது. எதிர்தரப்பு வான்படையால் பயனுள்ள குறுக்கீடு எதுவும் செய்ய இயலாத நிலை உருவாகிறது.
கடற்பகுதியில் வான் ஆளுமைக்கு இணையான நிலை கடல் ஆளுமை எனப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads