வாயுசேனா பதக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாயுசேனா பதக்கம் (Vayusena Medal) இந்திய வான்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காகவும், அமைதிக்கால சேவைகளின் சிறப்பிற்காகவும், வழங்கப்படும் இந்தியப் படைத்துறை விருதாகும். மறைவிற்கு பின்னரும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்கள் பெற்றவருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...

இதனை 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று, குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு, 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயல் புரிந்தோருக்கு "வாயுசேனா பதக்கம் (வீரச்செயல்)" என்றும், பிறருக்கு "வாயுசேனா பதக்கம் (சிறப்புப் பணி)" என்றும், வகைபடுத்தப்பட்டுள்ளது.

Remove ads

விவரணம்

முகப்பு: தாமரை மலர்வது போன்ற நான்கு கைகள் உடைய வெள்ளி நட்சத்திரம். நடுவில் தேசியச் சின்னம். ஓர் நேர் சட்டக்கத்திலிருந்து தொங்குமாறான அமைப்பு. சட்டகத்தின் ஓரங்களில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.

பின்புறம்: சிறகுகள் விரித்த இமாலாயக் கழுகு. அதன் மேலும் கீழும் இந்தியில் "வாயு சேனா பதக்கம்" என்ற பொறிப்பு.

நாடா: 2 மிமீ அகலமுள்ள கருவெள்ளை மற்றும் செம்மஞ்சள் பட்டைகள் கீழிருந்து மேலாக குறுக்காகவும் மாறி மாறியும் இருக்குமாறு 30 மிமீ நாடா.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads