வால்ட் டிஸ்னி நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வால்ட் திசினி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[3], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வாலுடு திசினியின் தாக்கம் கணிசமானது.
திசினி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வாலுடு திசினி மற்றும் உரோய் ஓ திசினி ஆகியோரால் திசினி பிரதர்சு காட்டூன் சிடூடியோவாக நிறுவப்பட்டது. இது வாலுடு திசினி சிடூடியோசு மற்றும் வாலுடு திசினி புரொடக்சன்சு ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வாலுடு திசினி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் திசினி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.
வாலுடு திசினி பிச்சர்சு, வாலுடு திசினி அனிமேசன் சிடூடியோசு, பிக்சர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, உலூகசுபிலிம், 20ஆம் சென்சுரி பாக்சு, பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்சு மற்றும் புளூ சிகை சிடூடியோசு போன்றவை வாலுடு திசினி சிடூடியோசு நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads