வால்லெசு மாரினெரிசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வால்லெசு மாரினெரிசு (Valles Marineris) (இலத்தீன்; வால்லெசு மாரினெரிசு ) என்பது 1971 - 72 ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் இருந்த ஒரு பள்ளத்தாக்கு ஆகும்.[1] சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஒன்றான வால்லெசு மாரினெசு , 4,000 கி.மீ. (2,500 மைல்) நீளமும் 200 km (120 mi) கி.மீ. (120 மைல்) அகலமும் , 7 km (23,000 அடி) கி.மீ. (23,000 ) ஆழமும் கொண்டது.[2][3]

வால்லெசு மாரினெரிசு செவ்வாய்க் கோளின் நிலநடுவரைக்குக் கிழக்கே தார்சிசு பல்கேலாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது கோளின் சுற்றளவில் கிட்டத்தட்ட கால் பகுதி வரை நீண்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கு அமைப்பு மேற்கில் நோக்டிசு இலாபிரிந்தசுவில் தொடங்கி, கிழக்கே செல்கிறது , அவை தித்தோனியம், யூசு சாசுமாட்டா , பின்னர் மெலாசு காண்டோர், ஓஃபிர் சாசுமாட்டா , பின்னர் கோபிரேட்சு சாசுமா , பின்னர் கங்கை காப்ரி, இயோஸ் சாசுமேட்டாவை அடைந்து, இறுதியாக இது கரடுமுருடான முறம்பு நிலப்பரப்பைக் கொண்ட ஒரு வெளியேறும் கால்வாய் பகுதியில் வற்றி விடுகிறது , இக்கால்வாய் கிறிசு பிளானிட்டியாவின் படுகையில் முடிவடைகிறது.

வால்லெசு மாரினெரிசு என்பது செவ்வாய்க் கோளின் மேலோட்டத்தில் உள்ள ஒரு பெரிய மேலோட்டுத் த்ட்டடின் விரிசல் என்று அண்மையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[4][5] மேற்கில் உள்ள தார்சிசு பகுதியில் மேலோடு தடிமனாகி , பின்னர் அரிப்பினால் விரிவடைந்தது என்று பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். பிளவுகளின் கிழக்குப் பக்கங்களுக்கு அருகில் நீர் அல்லது கார்பன் டை ஆக்சைடு மூலம் உருவாகிய கால்வாய்கள் இருப்பதாகத் தெரிகிறது. பாவோனிசு மோன்சின் பக்கத்திலிருந்து பாயும் எரிமலை அரிப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய கால்வாய் வால்லெசு மரினெரிசு என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.[6]

Remove ads

மேலும் காண்க

  • செவ்வாய்க் கோளின் புவிப்பரப்பியல்
  • செவ்வாய்க் கோளில் உள்ள ஏரிகள்
  • வாலசு மாரினெரிசு
  • நோக்டிசு பள்ளத் தாக்கு

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads