வா. மு. சேதுராமன்

தமிழறிஞர், கவிஞர், தமிழ் உரிமைச் செயற்பாட்டாளர் From Wikipedia, the free encyclopedia

வா. மு. சேதுராமன்
Remove ads

வா. மு. சேதுராமன் (V. M. Sethuraman)(9 பெப்ரவரி 1935 – 4 சூலை 2025) என்பவர் தமிழறிஞரும் கவிஞரும் தமிழ் உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார்.

விரைவான உண்மைகள் வா. மு. சேதுராமன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சேதுராமன் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 9 பெப்ரவரி 1935 அன்று பிறந்தார்.

இவர் ஏழ்மையில் வளர்ந்தாலும், தன் முயற்சியால் தமிழ் புலவர், முதுகலை, பி.எட்., பட்டங்களைப் பெற்று திருவல்லிக்கேணி முசுலீம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1988-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழ்ப்பணி என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார்.

Remove ads

படைப்புகள்

  • நெஞ்சத் தோட்டம்
  • தாயுமானவர் அந்தாதி
  • ஐயப்பன் பாமாலை
  • தமிழ் முழக்கம்
  • வாழ்க நீ எம்மான் (காந்தி பற்றிய பன்மொழிக் கவிதை)
  • எண்ணச்சுடர் (கவியரங்கக் கவிதைகள்)
  • தாய்மண் (காவியம்)
  • 20 கட்டளைகள் (இந்திராகாந்தி )
  • ஐயப்பன் ஆற்றுப்படை
  • உலகை உயர்த்திய ஒருவன்
  • பற்றிலான் பற்று
  • மலைநாட்டின் மீதினிலே (பயணக் காவியம்)
  • காலக்கனி (கவிதை நாடகம்)
  • சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்)[1]
  • இயேசு அந்தாதி[2]

விருதுகள்

சேதுராமனுக்குப் பல்வேறு அமைப்புகளாலும் தனி நபர்களாலும் பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி, ஐயப்பன் அருள்கவி, கவிஞர் குலத் திலகம், செந்தமிழ்க் கொண்டல் போன்ற பட்டங்கள் வழங்கபட்டுள்ளன. 1989-1990ஆம் ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. 2001-ஆம் ஆண்டு, தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினர் திருவள்ளுவர் விருது வழங்கினார்கள்.[3] 2015-ஆம் ஆண்டு, தினத்தந்தி நாளிதழ் சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது வழங்கியது. இந்த விருது வெள்ளிப் பட்டயத்துடன் மூன்று இலட்சம் இந்திய ரூபாய் ரொக்கப்பரிசு கொண்டது.[4][5]

இறப்பு

2025 சூலை 4 அன்று, சேதுராமன் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.[6]

பார்வை நூல்

  • தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads