விக்தர் நோர்
வானியலாளர் (1840-1919) From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்தர் கார்லோவிச் நோர் (Viktor Karlovich Knorre) உருசியம்: Виктор Карлович Кнорре(4 அக்தோபர் 1840 – 25 ஆகத்து 1919) செருமானிய இனக்குழு சார்ந்த உருசிய வானியலாளர் ஆவார்.இவர் நிகோலயேவ், புல்கோவோ, பெர்லின் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். இவர் 158 கோரோனிசுவையும் மேலும் மூன்று சிறுகோள்களையும் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். நோரின் தந்தையார் கார்ல் பிரீட்ரிக் நோர்; தாத்தா எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் ஆவார். இவர்கள் இருவரும் புகழ்பெற்ர வானியலாளர்கள் ஆவர். அண்மையில் மூன்று தலைமுறை நோர் வானியலாளர்களின் நினைவாக நாசா ஒரு குறுங்கோளுக்குப் பெயரிட்டுள்ளது. இது குறுங்கோள்14339 நோர் எனப்படுகிறது.[1]
Remove ads
வாழ்வும் குடும்பப் பின்னணியும்
நோர் மூன்று தலைமுறை வானியலாளர்களின் குடும்பத்தில் பிறந்தார் family.[2] இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் (1759–1810) ஆவார்.[3] இவர் செருமனியில் இருந்து எசுதோனியாவில் இருந்த தோர்பாத்துக்குச் சென்று, அங்கு 1802 முதல் 1810 வரை தோர்பாத் வான்காணக நோக்கீட்டாளராகவும் தோர்பாத் பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
இவரது தந்தையார், கார்ல் பிரீட்ரிக் நோர் (1801–1883),[3] நிகோலயேவ் வான்காணகத்தை 1827 இல் உருவாக்கி அங்கே இயக்குநராக இருந்துள்ளார்.
விக்தர் 15 பிள்ளைகளில் ஐந்தாவதாக நிகோலயேவில் (இன்றைய மிகோலயீவ், உக்கிரைன்) பிறந்தார் இவர் 1862 இல் வானியல் கற்க வில்கெல்ம் ஜூலியசு போயெர்சுடருடன் பெர்லினூக்குச் சென்றார்.[4] இவர் 1867 இல் புல்கொவோ வான்காணகத்தில் வானியல் கணிப்பாளராகச் சேர்ந்தார்[5] பின்னர் தந்தையாருடன் 1871 இல் பெர்லின் சென்று பெர்லின் வான்காணகத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
Remove ads
வானியலாளராக
1873 இல் இருந்து பெர்லின் வான்காணக நோக்கீட்டாளராகப் பனிபுரிந்தார். இவர் நான்கு குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார்.[6] இவர் மாணவருக்கு கல்வி தரவில்லை. ஆனாஇ பெர்லின் வான்காணக கருவிகளைப் பயன்படுத்த கற்றுதந்தார். இவர் 1892 இல் வானியல் பேராசிரியர் ஆனார்.இவர் வானியல் கருவி மேம்பாட்டில் கவனம் செலுத்தினார். இவர் நில நடுவரை தொலைநோக்கி நிறுவல் பற்றி ஆய்வுகள் வெளியிட்டுள்ளார். இது நோர்-ஈலே நிறுவல் என அழைக்கப்படுகிறது.[4]
| 158 கோரோனிசு | ஜனவரி 4, 1876 | 158 |
| 215 ஓயெனோன் | ஏப்பிரல் 7, 1880 | 215 |
| 238 கைப்பேசியா | ஜூலை 1, 1884 | 238 |
| 271 பெந்தேசிலியா | அக்தோபர் 13, 1887 | 271 |
Remove ads
சதுரங்க வல்லுனராக
நோர் சிறந்த சதுரங்க வல்லுனர். இவர் அடோல்ஃப் ஆண்டர்சன், குசுதாவ் நியூமான், யோகான்னசு சுகர்தோர்த் ஆகியவரை எதிர்த்து ஆடியவர். இவர் 1860 களில் பல சதுரங்க ஆட்டப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.[7][8]
இரட்டைவீர்ர்கள் தற்காப்பில், நோர் வேறுபாடு எனப்படும் (சதிக விதிமுறை C59) இவரின் நினைவாக அழைக்கப்படுகிறது. இது இரட்டை வீரர்கள் தற்காப்பின் முதன்மை வரிசையில் பின்பற்றவேண்டிய முதல் பத்து நகர்த்தல்களைக் வரையறுக்கிறது. இது 10. Ne5 Bd6 11. d4 Qc7 12. Bd2. எனும் நகர்வுத் தொடரைக் குறிக்கின்றது[9] உரூய் உலோபேசின் திறந்த தற்காப்பின்நோர் வேறுபாடும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது 6. Nc3 எனும் நகர்வுத் தொடரைக் குறிக்கும்.[10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
