விசிட்ட சேவா பதக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசிட்ட சேவா பதக்கம் (Vishisht Seva Medal அல்லது VSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படக்கூடியதாகும்.
இந்தப் பதக்கம் துவக்கத்தில் "விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III" என வழங்கப்பட்டது[2]. 1967ஆம் ஆண்டு முதல் தற்போதையப் பெயரில் அழைக்கப்படுகிறது. பதக்க வடிவமைப்பில் இதனால் எந்த மாறுதல்களும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் போர்க்காலச் சிறப்புப் பணிகளுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுவதால்[2] இந்த விருது போரற்ற அமைதிக்காலப் பணிச் சிறப்பிற்காக வழங்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads