விசுவநாத நாயக்குடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads
Remove ads

விஷ்வனாத நாயக்குடு திரைப்படம் கிருஷ்ண தேவராயர் காலத்தைய வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தெலுங்குத் திரைப்படம். கிருஷ்ண தேவராயர் தமது தளபதியருள் ஒருவரான நாகமநாயக்கரை பாண்டிய அரசர்களுக்கு எதிராக மதுரையில் நடைபெறுகிற கிளர்ச்சியை அடக்க மதுரைக்கு அனுப்புகிறார். கலகத்தை அடக்கிய நாகமநாயக்கர் மதுரை நகரைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு சுதந்திர அரசாகப் பிரகடணம் செய்து கொள்கிறார்.

நாகமநாயக்கரைக் கைது செய்து மதுரை நகரத்தை மீண்டும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் இணைப்போர் உரிய சன்மானங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மிகுந்த அரசபக்தியுள்ள விஷ்வனாத நாயக்கர் மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வருகிறார். விஷ்வனாத நாயக்கர் மதுரையை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்து கொண்ட நாகமநாயக்கரின் மகனாவார்.

விஜயநகரப் படைகளை வழிநடத்திச் சென்று நாகமநாயக்கரைக் கைது செய்து அழைத்து வருகிறார் விஷ்வனாத நாயக்கர். மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றியமைக்காக கைமாறாக என்ன வேண்டும் என்று கேட்ட மன்னரிடம் தமது தந்தையை மன்னிக்குமாறு கோருகிறார் விஷ்வனாத நாயக்கர். இதையடுத்து நாகமநாயக்கர் விடுவிக்கப்படுகிறார்.

விஷ்வனாத நாயக்கரின் அரச பக்தியை மெச்சும் விதமாக மதுரையில் ஆட்சி செலுத்துகிற உரிமையை அவருக்கே வழங்குகிறார் கிருஷ்ண தேவராயர். அக்காலத் தமிழ்நாட்டில் நாயக்க ஆட்சியின் துவக்கமாக அமைந்தது இச்சம்பவமே.

திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்: தாசரி நாரயண ராவ்

இசை: ஜெ.வி. ராகவுலு

தெலுங்கில் சிவாஜிகனேசன் அவர்களின் குரல்: கொங்கர ஜக்கையா


கதாபாத்திரங்களை ஏற்று நடித்தோர்:
விஷ்வனாத நாயக்கர் - கிருஷ்ணா

நாகமநாயக்கர் - சிவாஜி கனேசன்

விஷ்வனாத நாயக்கரின் தாயார் - கே.ஆர். விஜயா

கிருஷ்ண தேவராயர் - கிருஷ்ணம் ராஜு

அரசவை நாட்டியக் காரிகை - ஜெயப்ரதா


இவர்களுடன் சோமையாஜுலு, காந்த்தா ராவ், மோகன்பாபு, ராஜ சுலோச்சனா, சரத்பாபு மற்றும் பலர் இத்திரைப்படத்தில் பாத்திரமேற்றுள்ளனர்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads