விசுவ இந்து பரிசத்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விசுவ இந்து பரிசத் (Vishva Hindu Parishad), ஆங்கிலம்: World Hindu Council), சுருக்கமாக விஎ.ஹெச்.பி என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு, இந்துத்துவா கொள்கை உடைய வலது சாரி இந்து தேசியவாத அமைப்பாகும். சுவாமி சின்மயானந்தர் ஆசியுடன் எம். எஸ். கோல்வால்கர், எஸ். எஸ். ஆப்தே ஆகியோர்களால் 29 ஆகஸ்டு 1964இல் புதுதில்லியில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் மைய நோக்கம், இந்து சமுக மக்களை ஓரணியில் திரட்டி, இந்து தர்மத்தை பாதுகாப்பதே.

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...

வி.ஹெச்.பி அமைப்பு சங்கப் பாரிவாரில் ஒரு அங்கமாகும்[2][3] இந்து தேசியம் என்ற அடிப்படையில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைமையில் இந்தியாவில் செயல்படும் இந்து சமுக சேவை அமைப்பாகும். [4][5]இந்துக் கோயில்களை கட்டுதல், புணரமைத்தல், பசு வதை தடை செய்தல், இந்துக்களை மதமாற்றம் செய்வதை தடுத்தல், பிற சமயத்தவரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இந்து சமய வழிபாட்டு இடங்களை மீட்டல் போன்ற விசயங்களில் இவ்வமைப்பு ஈடுபடுகிறது.

Remove ads

அணிகள்

இவ்வமைப்பின் இளைஞர் அணியாக பஜ்ரங் தளம் மற்றும் மகளிர் அணியாக துர்கா வாகினியும் செயல்படுகிறது.

கிளைகள்

விசுவ இந்து பரிசத்தின் கிளைகள் ஐக்கிய அமெரிக்கா[6], ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வேறு பெயர்களில் இயங்குகிறது.

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads