விஜய் கார்த்திக் கண்ணன்
இந்திய ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜய் கார்த்திக் கண்ணன் (Vijay Kartik Kannan) முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றும் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
விஜய், சக ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தியை தொழில் ரீதியான உறவினால் ஈர்க்கப்பட்டு 2022 மார்ச்சு 16 அன்று மணந்தார்.[2]
தொழில்
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் தனது வாழ்க்கையை தமிழ்த் திகில் படமான டார்லிங் 2 (2016) மூலம் தொடங்கினார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில், சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பு முயற்சியான கனாவுக்கு (2018) ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிப்பதில் நம்பிக்கை இல்லாததால், அவர் வாய்ப்பை நிராகரிக்க வேண்டியதாயிற்று. பின்னர், நெல்சன் இயக்கிய சிவகார்த்திகேயனின் (2021) படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.[3]
விஜய் கார்த்திக் கண்ணன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும் தனது நீண்டகால நண்பரான ரத்ன குமார் இயக்கிய ஆடை (2019) படத்தில் பணியாற்றினார். அதே ஆண்டு விஜய் சேதுபதியின் சிந்துபாத் (2019) படத்திலும் பணியாற்றினார்.[1]
சில்லு கருப்பட்டி (2019), காத்துவாக்குல ரெண்டு காதல் (2022), ராவணாசுரா (2023) ஆகிய படங்களில் பணியாற்றியதற்காகவும் அறியப்பட்டவர். சமீபத்தில் ஜெயிலர் (2023) படத்தில் அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
Remove ads
திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
