விடை (இராசி)
12 இராசிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
விடை (இராசியின் குறியீடு: ♉, சமசுகிருதம்: ரிஷபம்) என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ λ <60º)[1].
Remove ads
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் வைகாசி மாதம் விடைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மே மாத பிற்பாதியும், சூன் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஏப்ரல் 20 முதல் மே 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
இந்த இராசிக்கான அதிபதி வெள்ளி (கோள்) என்றும் உரைப்பர்[3].
கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிசநல்லூரில் உள்ள இயோகநந்தீசுவரர் திருக்கோயில் இந்த இராசியினர் வழிபடவேண்டிய திருக்கோவில்[4].
மேற்கோள்கள்
மூலம்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads