வித்யாராஜாக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஜ்ரயான பௌத்தத்தில், வித்யாராஜாக்கள் என்பது புத்தர்களையும் போதிசத்துவர்களையும் பாதுகாப்பவர்களை குறிக்கும். வித்யாராஜா என்றால் அறிவாற்றலின் அரசன் என்று பொருள். எனினும் இது சீனத்தில் "பிராகசமான அரசன்" என்ற மொழிபெயர்ப்பில் வழங்கப்படுகிறது. இவர்களை ஜப்பானிய மொழியில் ம்யொ - ஓ என அழைக்கப்படுகின்றனர்.

வித்யாராஜாக்களின் துணைகளை வித்யாராணிகள் என அழைப்பதுண்டு. எனினும் இப்பாகுபாடு பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
Remove ads
நம்பிக்கைகள்
பொதுவாக, வித்யாராஜாக்கள் புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பாதுகாவலராக கருதப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக ஐந்து வித்யாராஜக்கள் ஐந்து தியானி புத்தர்களின் பாதுகாவலர்களாக கருதப்படுகின்றனர்.
பௌத்த மறைபொருள் தத்துவத்தின் படி , புத்தர்களும் போதிசத்துவர்களும் தர்மத்தை கருணையின் மூலமும் அன்பின் மூலமும் போதிப்பவர்கள். ஆனால் விதயாராஜாக்கள் பயத்தின் மூலமாக மற்றவர்களை தர்மத்தை பின் பற்ற செய்பவர்கள்.
சித்தரிப்பு
வித்யாராஜாக்கள் பெரும்பாலும் உக்கிர மூர்த்திகளைப் போல் பல முகங்கள், கரங்கள் முதலியவற்றோடு சித்திரக்கப்படுகின்றனர். கையில் ஆயுதங்கள் ஏந்தியவாறும் சில சிமயங்களில் கபாலம் மற்றும் மிருக தோல்களை அணிந்தவர்களாகவும் தீப்பிழம்புகள் சூழ இருப்பவர்களாகவும் காட்சியளிக்கின்றனர்.
இதற்கு விதிவிலக்கு மகாமயூரி. இவர் எப்போது அமைதியான தோற்றத்தில் மயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
வித்யாராஜாக்களின் பட்டியல்
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads