விநாயகன்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

விநாயகன்
Remove ads

விநாயகன் (Vinayakan) ஒரு இந்திய நடிகரும், பின்னணிப் பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். [1] [2] [3] 1995 ஆம் ஆண்டு மாந்திரிகம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இரண்டு படங்களில் துணை வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்தார்.

விரைவான உண்மைகள் விநாயகன், பிறப்பு ...

2016 ஆம் ஆண்டில், ராஜீவ் ரவியின் கம்மடிபாடம் என்ற படத்தில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விநாயகன் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். மேலும் இது விமர்சகர்களால் நன்கு பாராட்டப்பட்டது. [4] படத்தில் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். [5] எடகொச்சி டியூடு என்ற பாத்திரத்தில் ஆடு - ஒரு பீகரா ஜீவி ஆனு , இதைத் தொடர்ந்து ஆடு 2 படத்திலும், லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ஈ.ம.யா படத்தில் அய்யப்பன் ஆகியவை இவரது அங்கீகரிக்கப்பட்ட பாத்திரங்களில் அடங்கும். இது தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட தசாப்தத்தின் முதல் 25 மலையாளப் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அலை இயக்கத்தின் வரையறுக்கும் திரைப்படங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது.

இவர் 2023 இல் ரஜினிகாந்த் நடித்த தமிழ் மொழிப் படமான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பரந்த கவனத்தைப் பெற்றார்.

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads