விநாயக சதுர்த்தி
ஒவ்வோர் ஆண்டும், தமிழ் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று கொண்டாடப்படும் விநாயகர் பிறந்தநாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
Remove ads
வரலாறு
இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது.[1] இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார்.[2][3][4] மகாராட்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்குவர்.
Remove ads
தமிழகத்தில்

தமிழகத்தில் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு குறிப்புகள் இல்லை. பொ.ஊ. 5ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் படையில் தளபதியாக இருந்த சைவ பெரியோர் சிறுதொண்டர் நாயனார் தமிழத்திற்கு கொண்டு வருகிறார். 18ம் நூற்றாண்டிற்கு பிறகே விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கபடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads