விந்தா கரண்டிகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விந்தா கரண்டிகர் (Govind Vinayak Karantikar, 23 ஆகத்து 1918 – 14 மார்ச்சு 2010) என்பவர் மராத்தி மொழி எழுத்தாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர் மற்றும் இலக்கியவாதி ஆவார். இந்திய நாட்டு உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதையும் (2003) சாகித்திய அகாதமி விருதையும்(1996) பெற்றவர்.[1]
வாழ்வும் பணியும்
விந்தா கரண்டிகர் என எழுத்துலகில் அறியப்பட்ட கோவிந்த் விநாயக் கரண்டிகர் மராட்டிய மாநிலத்தில் சிந்துதர்க் மாவட்டம் கால்வல் என்னும் சிற்றுரில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கோலாப்பூரில் உள்ள பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மும்பையில் ஆசிரியர் பணியில் சேர்ந்து தம் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அரிசுடாட்டிலின் கவிதைகளை மராத்தி மொழியில் மொழிபெயர்த்தார். விந்தா கரண்டிகர் தாம் எழுதிய கவிதைகளை தாமே மொழிபெயர்த்தார். குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதினார்.
Remove ads
எழுதிய நூல்களில் சில
- சுவேதா கங்கா (1949) [2]
- முருத் கந்தா (1945)
- துருபத் (1959)
- ஜடக் (1968)
- விருபிகா
பெற்ற பிற விருதுகள்
- கேசவசுத் பரிசு
- சோவியத் லாந்து நேரு இலக்கிய விருது
- கபீர் சம்மன்
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads