விந்துப் பாய்மம்

விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திரவம் From Wikipedia, the free encyclopedia

விந்துப் பாய்மம்
Remove ads

விந்துப் பாய்மம் அல்லது விந்துப் பாய்மத் திரவம் என்பது கருக்கட்டலுக்குத் தேவையான விந்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு வெண்ணிறத் திரவமாகும். இதனை ஆங்கிலத்தில் Semen அல்லது Seminal fluid என்று அழைப்பர். இது விந்துப்பை, புராஸ்டேட் சுரப்பி, கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும். இப்பொருள் விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அவை நீந்திச் செல்லும் ஊடகமாகவும் விளங்கும். ஒருமுறை வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தில் 50 மில்லியன் விந்து உயிரணுக்கள் இருக்கலாம். புணர்ச்சியின் பொது ஆண் புணர் உறுப்பு விறைத்துப் பெரிதாகும். அவ்வுறுப்பின் அடிப்பகுதியிலிருந்து தோன்றும் தசை இயக்கங்களால் விந்துப் பாய்மம் விசையுடன் பெண்ணின் கலவிக் கால்வாயினுள் பீச்சப்படும்.[1][2][3]

Thumb
பெட்ரி தட்டில் உள்ள மனித விந்துப் பாய்மம்.
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads