விந்து நாளத்திரள்

From Wikipedia, the free encyclopedia

விந்து நாளத்திரள்
Remove ads

விந்து நாளத்திரள் அல்லது விந்தக சுருட்டுக் குழாய் (எபிடைமிஸ்) என்பவை ஆண் இனப்பெருக்கத் தொகுதி உறுப்புக்களாகும். இவை ஈரடுக்குக் கொண்ட சூடோஸ்ட்ராடிபைடு எபிதீலியம் செல்களால் ஆனவை. இவ்வுறுப்பு விந்துச் சுரப்பியிலிருந்து வெளிவரும் பல வளைவுகளைக் கொண்ட நுன்குழல்களால் ஆனது. இது விந்துச் சுரப்பியின் பின் பகுதியில் இருக்கும். இவ்வுறுப்பினுள் விந்தணுக்கள் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றன. விந்து வெளியேற்றுக் குழாய் மூலமாக ஆண்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் விந்து நாளத்திரள், கிரேயின் ...
Remove ads

பாகங்கள்

இவற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்:

  • தலைப்பகுதி (Caput)
  • மெய்யம் (Corpus)
  • வால் பகுதி (Cauda)

பயன்கள்

விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு நாளத்திரளின் தலைப்பகுதிக்குச் செல்கின்றன; பின்னர் மெய்யம் வழியே வால்பகுதிக்குச் சென்று அங்கு தேக்கப்படுகின்றன. விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு விந்து தள்ளலுக்கு தகுதியானவை அல்ல. அவற்றால் நீந்தவோ சூல்முட்டையை கருக்கட்டவோ இயலாது. வால்பகுதிக்குச் செல்லும்போது விந்தணுவால் கருக்கட்ட இயலும். இங்கு விந்தணுக்கள் விந்து வெளியேற்றுக் குழாய்கள் வழியாக விந்துப் பாய்மக் குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. இன்னும் நீந்த முடியாத விந்தணுக்கள் தசை குறுக்கங்களால் இக்குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. விந்துப் பாய்மக் குமிழ்களில் இறுதிநிலைக்கு தயாராகின்றன.[1]

Remove ads

நோய்

எபிடைமிசிற்கு ஏதேனும் காயமோ தொற்றோ ஏற்பட்டால் எபிடைமிடிசு எனப்படும் நாளத்திரள் அழற்சி ஏற்படுகிறது. மிகுந்த வலி உண்டாக்கும் இந்த நோய் குணமாக பல நாட்களாகலாம். சில நேரங்களில் விந்துச் சுரப்பியையே நீக்க வேண்டியிருக்கும். இதற்கான காரணங்கள் முழுமையாக அறியப்படவில்லை. எனவே சிகிச்சையும் பலதரப்பட்டவை. சில மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவர்.

படிமங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads