வியட்நாமில் பௌத்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வியட்நாமில் பௌத்தம் என்பதானது வியட்நாமிய மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற, முதன்மை மதமான, மகாயான பௌத்தமாகும்.[1] பௌத்தம், வியட்நாமிற்கு கி.மு.மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்தோ, கி.பி.ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டிலோ வந்திருக்க வேண்டும்.[2] வியட்நாம் பௌத்தமானது தாவோயிசம், சீன நாட்டுப்புற மதம், மற்றும் வியட்நாமிய நாட்டுப்புற மதம் ஆகியவற்றின் சில கூறுகளோடு தொடர்பு கொண்டுள்ளது.[3]

Remove ads
மகாயான பௌத்தம்
மகாயான பௌத்தம் சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படுகிறது.[4]
வரலாறு
முதலில் இந்தியாவில் இருந்தும், பின்னர் பிரதானமாக சீனாவிலிருந்து பௌத்தம் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமிற்கு வந்தது. இருந்தபோதிலும், இது 15 ஆம் நூற்றாண்டில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாக இருந்தது.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டாலும், குடியரசுக் காலத்தில், கத்தோலிக்க சார்பு கொள்கைகள் பௌத்தர்களை எதிர்த்தன. தற்போது, மக்கள்தொகையில் 16% மட்டுமே பௌத்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் அது இன்னும் மிகப்பெரிய மதமாகும். எந்தவொரு கோவில்களும் அரசிலிருந்து சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றாலும், அரசாங்கம் இப்போது பௌத்த மதத்திற்கு அதிக தளர்வுகள் அளித்திருக்கிறது.[5] வியட்நாமின் 80 விழுக்காட்டு மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றி வருகின்றனர்.[6]
Remove ads
மகாயான பௌத்தம்
வியட்நாமில் மகாயான பௌத்தம் முதன்மையாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் தெராவடா நாடுகளில் வியட்நாம் தனித்துவமானது. பெரும்பாலான வியட்நாமிய மஹாயான பௌத்த மதம் சன் (ஜென்) மற்றும் தூய நிலத்தின் கலவையாக உள்ளது. சில தியன் தாய் செல்வாக்கைக் கொண்டுள்ளது. எனினும், தெராவிடின் பெளத்தம் கெமர் இனத்தவர் மத்தியில் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை வியட்நாம் ஆட்சியாளர்களின் ஆதரவு இருந்தது. கி.பி.1428 முதல் கி.பி.1788 வரை ஆட்சி செய்த லீ வம்சத்தின் போது பௌத்தம் செல்வாக்குடன் இருந்தது.[7]
அமைப்புகள்
வியட்நானாமில் பௌத்த அமைப்புகள் உள்ளன. அவை வியட்நாம் அரசாங்கத்தின் ஒப்புதலுடனான பௌத்த சர்ச் (BCV) மற்றும் வியட்நாம் சுதந்திர ஐக்கிய ஒன்றிய பௌத்த சர்ச் (UBCV) என்பனவாகும்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads