வியாசர் விருந்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

விரைவான உண்மைகள் நூலாசிரியர், பட வரைஞர் ...

நூலாசிரியர் முன்னுரை

வியாசர் விருந்து என்ற தொடர் நூலாக பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபோது ராஜாஜி அவர்களால் எழுதப்பட்ட முன்னுரை: 'முதல் தாம்பூலம்' என்ற பெயரில் சிசுபாலன் கதையை ராஜாஜி கல்கி இதழுக்கு எழுதுகிறார். அதைப் பார்த்த கல்கி ஆசிரியரும் அவரோடு டி. கே.சி. என்பவரும் இணைந்து மகாபாரதத்தை எழுதத் தூண்டியிருக்கின்றனர்.

எட்டாம் பதிப்பிற்கு ஆசிரியர் முன்னுரை

திரும்பத் திரும்ப படிக்கவேண்டிய புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து என்று இராஜாஜி குறிப்பிடுகிறார். தான் எழுதிய நூல் ஆகினும் உண்மையில் நம்முடைய நாட்டின் தர்மதேவதை தூண்டித்தான் தான் எழுதியதாகவும் இதைப் படிக்கும்போது இதை நான்தான் எழுதினேனா என்று தமக்கே வியப்பும் ஆனந்தமும் உண்டானதாக குறிப்பிடுகின்றார். [1]

கவிமணியின் வாழ்த்து

இந்நூலை அனுபவித்து சுவைத்த கவிமணி தேசிகவிநாயகம் அவர்கள்

"விண்ணமுதை யொத்த வியாசர் விருந்தளித்த புண்ணியனே வேதாந்தப் போதகனே!-தண்ணியநீள் ஆழிசூழ் இவ்வுலகில் ஆழியான் இன்னருளால் வாழிநீ ஐயா! மகிழ்ந்து" எனப் பாடிப் பாராட்டினார்.[2]

அத்தியாயங்கள்

1.கணபதி ராயசம் 2. தேவவிரதன் 3. பீஷ்ம சபதம் 4. அம்பையும் பீஷ்மரும் 5. தேவயானியும் கசனும் 6. தேவயானி மணந்தது 7. யயாதி 8. விதுரன் 9. குந்திதேவி 10. பாண்டுவின் முடிவு 11. பீமன் 12. கர்ணன் 13. துரோணர் 14. அரக்கு மாளிகை 15. பாண்டவர்கள் தப்பியது 16. பகாசுரன் வதம் 17. திரௌபதி சுயம்வரம் 18. இந்திரப் பிரஸ்தம் 19. சாரங்கக் குஞ்சுகள் 20. ஜராசந்தன் 21. ஜராசந்தன் வதம் 22.முதல் தாம்பூலம் 23.சகுனியின் பிரவேசம் 24.ஆட்டத்திற்கு அழைப்பு 25.பந்தயம் 26.திரௌபதியின் துயரம் 27.திருதராஷ்டிரன் கவலை 28.கிருஷ்ணன் பிரதிக்ஞை 29.பாசுபதம் 30.துயரம் புதிதல்ல 31. அகஸ்தியர் 32. ரிஷ்ய சிருங்கர் 33. பயனற்ற தவம். யவக்ரீவன் கதை 34. யவக்ரீவன் மாண்ட கதை 35. படிப்பு மட்டும் போதாது 36. அஷ்டவக்கிரன் பீமனும் அனுமானும் 38. நான் கொக்கல்ல 39. துஷ்டர்களுக்கு திருப்தி ஏது? 40. துரியோதனன் அவமானப்பட்டது 41. கண்ணன் பசி 42. நச்சுப் பொய்கை 43. அடிமைத்தொழில் 44. மானம் காத்தல் 45. விராடனைக் காத்தது 46. உத்தரன் 47. பிரதிக்ஞை முடிந்தது 48. விராடன் உடைய பிரம்மை 49. மந்திராலோசனை 50. பார்த்தசாரதி 51. மாமன் எதிர்க்கட்சி 52. விருத்திரன் 53. நஹுஷன் 54. சஞ்சயன் தூது 55. ஊசிமுனை நிலமும் இல்லை 56. கண்ணன் தூது 57. பாசமும் தர்மமும் 58. பாண்டவ சேனாதிபதி 59. கௌரவ சேனாதிபதி 60. பலராமன் 61.ருக்மிணி 62. ஒத்துழையாமை 63. கீதையின் தோற்றம் 64. ஆசி பெறுதல் 65. முதல்நாள் யுத்தம் 66. இரண்டாம்நாள் யுத்தம் 67. மூன்றாம்நாள் யுத்தம் 68. நான்காம்நாள் யுத்தம் 69. ஐந்தாவது நாள் யுத்தம் . ஆறாம் நாள் யுத்தம் 71. ஏழாவது நாள் யுத்தம் 72. எட்டாம்நாள் யுத்தம் 73. ஒன்பதாம் நாள் யுத்தம் 74. பீஷ்மர் வீழ்ந்தார் 75. பிதாமகரும் கர்ணனும் 76. துரோணர் தலைமை 77. உயிருடன் பிடிக்க 78. பன்னிரண்டாவது நாள் 79. சூரன் பகதத்தன் 80. அபிமன்யு 81. அபிமன்யு வதம் 82. புத்திர சோகம் 83. சிந்து ராஜன் 84. தான் பயிலாத கவசதாரணம் 85. தருமன் கவலை 86. யுதிஷ்டிரன் ஆசை 87. கர்ணனும் பீமனும் 88. குந்திக்கு கொடுத்த வாக்கு 89. பூரிசிரவஸ் வதம் 90. ஜெயத்ரதன் வதம் 91. துரோணரின் முடிவு 92. கர்ணனும் மாண்டான் 93. துரியோதனனின் முடிவு 94. பாண்டவர்களின் வெட்கம் 95. அசுவத்தாமன் 96. புலம்பி என்ன பயன் ? 97. எவன் தேற்ற போகிறான்? 98. அண்ணனைக் கொன்றேன் 99.அரசர்களுடைய கடமை 100. பொறாமை 101. உதங்கரின் வெட்கம் 102. படி மாவு 103. பதினைந்து ஆண்டுகள் ராஜ்ய பாரம் 104. திருதராஷ்டிரன் வனம் சென்றான் 105. மூவர்களின் முடிவு 106. கண்ணன் மறைந்தான் 107. தர்ம புத்திரன்

Remove ads

1.கணபதிராயசம்

வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதிய நிகழ்வை குறிப்பிடுகின்ற அத்தியாயம் ஆகும். கூடவே இந்த அத்தியாயத்தில் மகாபாரதக் கதைச் சுருக்கத்தை குறிப்பிடுகின்றார் ராஜாஜி.

2.தேவவிரதன்

சந்தனு கங்காதேவியிடம் அவள் யாரென்று தெரியாமல் காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ள வேண்டுகிறான். அதற்கு கங்காதேவி தன்னை யார் என்று கேட்கக் கூடாது என்றும் தான் எதைச் செய்தாலும் அதைப் பற்றியும் கேட்கக்கூடாது என்றும் அவ்வாறு கேட்டால் தான் அவரை விட்டு பிரிந்து போய் விடுவேன் என்றும் நிபந்தனை விதிக்கிறாள்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads