பிருகஸ்பதி

From Wikipedia, the free encyclopedia

பிருகஸ்பதி
Remove ads

பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். [1] இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். அதனால் பிருகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. [2]

விரைவான உண்மைகள் பிருகஸ்பதி, தேவநாகரி ...

இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிருகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

இது சோதிடத்தின் படி இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும். இவர் ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவராவார்.

Remove ads

ஆட்சி, உச்சம் பற்றிய தகவல்

மேலதிகத் தகவல்கள் நட்பு, ஆட்சி ...

பார்வை

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்ப்பார் என சோதிடம் சொல்கிறது.

பாலினம்

கிரகங்களில் இவர் ஆண்.

தகவல்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரகங்கள். குரு இரண்டு வகைப்படும். அவை தேவ குரு மற்றும் அசுர குரு. தேவ குரு தான் நமது குரு பகவான் ஆவார். அசுர குரு 'சுக்கிரன்' ஆவார். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பில் குரு திசை நடக்கும்.

மேலதிகத் தகவல்கள் தகவல் ...
Remove ads

குரு திசை

குரு திசை சரியாக 16 வருடங்கள் கொண்டது.

மேலதிகத் தகவல்கள் புத்தி, வருடம் ...


இவற்றையும் பார்க்கவும்

சோதிடம்

மேற்கோள்கள் ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads