விரைவோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விரைவோட்டம் (sprint) அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள். யாரொருவர் முதலில் எல்லோரையும் முந்திக்கொண்டு தடகள எல்லையைக் கடக்கின்றார்கள் என்பதே போட்டி. இது தட கள விளையாட்டுக்களில் ஒன்று. பொதுவாக தடகளத்தின் நீளம் 60, 100, 200, 400 மீட்டர்களாக இருக்கும். மாரத்தான் போட்டிகள் போல் அல்லாமல் முழுத் தொலைவும் உயர்வேகத்தில் வீரர்கள் ஓட முற்படுவார்கள். பொதுவாக 60 மீ விரைவோட்டம் திறந்த வெளியில் நடைபெறுவதில்லை. அது உட்கூடத்திலேயே நடப்பது.[1][2][3]


Remove ads
பொதுவான தொலைவுகள்
- 60 மீ ஓட்டம்
- 100 மீ ஓட்டம்
- 200 மீ ஓட்டம்
- 400 மீ ஓட்டம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads