விர்கோ கொத்து விண்மீன்கூட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விர்கோ கொத்து விண்மீன்கூட்டம் (Virgo Cluster) என்பது விர்கோ எனப்படும் கன்னிராசி மண்டல வட்டாரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். கன்னிராசி மண்டல வட்டாரத்தில் எப்சிலான், டெல்ட்டா ,காமா, ஈட்டா, பீட்டா மற்றும் உமிகிரான் வெர்ஜினியஸ் விண்மீன்கள் அமைந்த மேற்புறப் பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட அண்டங்கள் உள்ளன[1] . இவற்றின் மையம் புவியிடமிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது[2]. செம்பெயர்ச்சியை அளவிட்டு இந்த அமைப்பு முழுவதும் நம்மிடமிருந்து 1200 கிமீ/வி என்ற வேகத்தில் விலகிச் செல்வதாகக் கண்டறிந்துள்ளனர். இவற்றிலுள்ள மிகப் பிரகாசமான அண்டம் கூட தோற்ற ஒளிப்பொலிவெண் 10[3] கொண்டதாக இருப்பதால் இவற்றைச் சாதாரணமான தொலை நோக்கியால் பார்க்க இயலாது. இவ் இரண்டாயிரம் அண்டங்களில் குறைந்தது 150 மிகப் பெரியவை. விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்களின் மையத்தில் M .84(NGC 4374), M.86(NGC 4406), M.87(NGC 4486) என்று பதிவு செய்யப்பட்ட, நீள் கோள் வடிவ மாபெரும் அண்டங்கள் உள்ளன[4][5][6]. இவை சிறு சிறு அண்டங்களின் சேர்க்கையினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றார்கள் .

விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள் பேரண்டத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் பொருண்மை ஒரு பக்கம் அதிகமாகச் செரிவுற்றிருப்பதால் நமது அண்டத்திலுள்ள துணை அண்டங்கள் யாவும் இதன் வலிமையான ஈர்ப்பினால் கவரப்படுகின்றன[7] . இதை 'விர்கோவின் உறிஞ்சுதல்' என்பர்.[8]
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads