வில்லிபுத்தூரார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. வில்லிபுத்தூரார், தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர், பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் என்பதை இவருக்கு இட்டனர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.
இவர் அருணகிரிநாதருடன் வாதங்களில் ஈடுபட்டவர் என்பதால் அவர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டே வில்லிபுத்தூராரது காலம் என்று கணிக்கப்படுகின்றது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads