வில்லியம் எட்வர்ட்சு டெமிங்
அமெரிக்க புள்ளிவிபரவியலாளர், பேராசிரியர், ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் ஆலோசகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் எட்வர்ட் டெமிங் (W. Edwards Deming) (அக்டோபர் 14, 1900 – டிசம்பர் 20, 1993) அமெரிக்காவை சேர்ந்த புள்ளிவிபரவியலாளர், பேராசிரியர், ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் ஆலோசகர் ஆவார். இவரது திட்டமிடு - செய் - சரிபார் -செயல்படு சுழற்சி (Plan-Do-Check-Act: PDCA Cycle) மிகவும் பிரபலமானதாகும். 1950இலிருந்து இவர் ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு சேவை, தயாரிப்புத் தரம், சோதனை மற்றும் விற்பனையில் பல புள்ளியியல் முறைகள் பயன்பாடு உட்பட, பல வழிகளில் வடிவமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.[1]
டெமிங் ஜப்பானின் புத்தமைப்பான புதிய தரம் நிறைந்த பொருட்களின் உற்பத்திக்கும், பொருளாதார சக்திக்கும் முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் மூலம் 1987ல் தேசிய தொழில்நுட்ப பதக்கம் வழங்கப்பட்டது.
Remove ads
கண்ணோட்டம்
1921ல் இருந்து வியோமிங் பல்கலைக்கழகத்திலிருந்து மின்துறை பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1925ல் கொலராடோ பல்கலைக்கழகத்திடம் இருந்து ஒரு எம் எஸ் முதுகலை பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகத்தில் 1928ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வென்றார். யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறும்போது பெல் ஆய்வுகூடத்தில் வேலைவாய்ப்பு பெற்றார். பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் துறையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையிலும் வேலை செய்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையில் சேன் டக்லச் மெக்ஆர்தூர் கீழே வேலை செய்யும் பொழுது சப்பாணீயர்களூக்கு புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொடுத்தார். பிற்காலத்தில் நீயூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads