வில்லியம் கேர்ட்
அமெரிக்க நடிகர் (1950–2022) From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் மெக்கார்ட் கேர்ட்[2][3] (ஆங்கிலம்: William McChord Hurt) (பிறப்பு: பிறப்பு: மார்ச்சு 20, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் திரைப்படத் துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு கென் ரஸ்ஸலல் இயக்கிய அறிவியல் புனைக்கதை அம்சமான 'ஆல்டர்டு இஸ்டேட்ஸ்' என்ற திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக 1980 ஆம் ஆண்டின் புதிய நட்சத்திரத்திற்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு 'பொடி கீட்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கோர்கி பார்க் (1983), கிஸ் ஆப் த இஸ்பைடர் வுமன் (1985), சில்றேன் ஆப் அ லெஸ்ஸர் கோட் (1986), புரொடகாஸ்ட் நியூஸ் (1987) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஹல்க் 2 (2008)[4] மற்றும் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[5] போன்ற மீநாயகன் திரைபபடத்தில் நடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads