வில்லியம் மோரிஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் மோரிஸ் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பாளர், கவிஞர், புதின எழுத்தாளர் மற்றும் சமூகச் சீர்த்திருத்தவாதி என்று பன்முகத்தன்மை கொண்டவர். பிரித்தானிய கலை மற்றும் கைவினை இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். இவர் பாரம்பரிய பிரித்தானிய ஆடை வடிவமைப்புக் கலை மற்றும் உற்பத்தி முறைகளின் மறுமலர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். இதுமட்டுமில்லாமல், அவரது இலக்கிய பங்களிப்புகள், நவீன கற்பனை வகையை உருவாக்க உதவியது. அதே நேரத்தில் பிரிட்டனில் ஆரம்பகால சோசலிச இயக்கப் பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்ததார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு செல்வந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் வால்தாம்ஸ்டோவில், எசெக்சில் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கலைசார் கல்வி பயிலும்போது பெர்மிங்காம் குழுவில் சேர்ந்தார். அப்போது மோரிஸ்க்கு இடைக்கால வரலாற்றின் மீது அதிகமான தாக்கம் ஏற்பட்டது. பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, அவர் கட்டிடக் கலைஞராகப் பயிற்சி பெற்றார். ஜேன் பர்டனை திருமணம் செய்துகொண்டார் மற்றும் பழங்கலையார்வளர் எட்வேர்டு பர்ன்ஸ் ஜோன்ஸ் மற்றும் டாண்டே கேப்ரியல் ரோஸெட்டி மற்றும் புதிய-கோதிக் கட்டிடக்கலைஞர் பிலிப் வெப் ஆகியோருடன் நெருக்கமான நட்புகளை உருவாக்கினார். வெப் மற்றும் மோரிஸ், கென்ட்டில் ஒரு புதிய வீடு "சிகப்பு வீடு" ஒன்றை அமைத்தனர். புலூம்ஸ்பெரி, மத்திய லண்டன் பகுதிக்கு மாறும் வரையில் அங்கு 1859 முதல் 1865 ஆம் ஆண்டு வரையில் வசித்தனர். 1861 ஆம் ஆண்டில், பர்ன்ஸ்-ஜோன்ஸ், ரோஸெட்டி, வெப் மற்றும் பிறருடன் இணைந்து, மோரிஸ், மார்ஷல், பால்க்னர் & கோ என்ற ஒரு அலங்கார கலை நிறுவனத்தை நிறுவினார். விக்டோரிய காலம் முழுவதும் உட்புற அலங்காரத்தை தாண்டி, மோரிஸ் திரைச்சீலைகள், சுவரொட்டுத்தாள், நெய்யப்பட்ட துணிகள், நாற்காளிகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவற்றை வடிவமைத்தது கொடுத்தது. 1875 ஆம் ஆண்டில், மோரிஸ் அந்த நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். பின் அந்த நிறுவனத்தின் பெயர் மோரிஸ் & கோ என்ற மறுபெயரிடப்பட்டது.
மோரிஸ் லண்டனில் உள்ள தனது பிரதான வீட்டைப் பயன்படுத்திக் கொண்டு தனது கிராமத்து வீடான கெல்ஸ்காட் மானர்,ஆக்ஸ்போர்டுஷயரில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டார். எரிக் மேக்னூசனுடன் மோரிஸ் ஐஸ்லாந்திற்கு பயணம் செய்தபோது அங்கு கேட்ட ஐஸலாந்து பழங்கால கதைகளினால் ஈர்க்கப்பட்டு, அந்த கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவரது பின்வரும் காவிய கவிதைகள் மற்றும் புதினங்களின் பதிப்புகள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றது. தி எர்த்லி பாரடைஸ் (1868-1870), ஏ டிரீம் ஆஃப் ஜான் பால் (1888), எட்டோபியன் நியூஸ் அட் நோவெர் (1890), மற்றும் கற்பனை காதல் தி வேல் அட் தி வேர்ல்ட் எண்ட் (1896). 1877 ஆம் ஆண்டில் அவர் பாரம்பரிய கட்டிடங்களின் மறுசீரமைப்பின் போது ஏற்பட்ட சேதத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்காக பண்டைய பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாப்பு அமைப்பை நிறுவினார். மார்க்சிசத்தை தழுவிக்கொண்டார் மற்றும் அராசகவாதத்தால் பாதிப்புக்குள்ளானார். அதனால் 1880 ஆண்டில் மோரிஸ், ஒரு புரட்சிகர சோசலிச ஆர்வலர் ஆனார்; சமூக ஜனநாயக கூட்டமைப்பு (SDF) ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர் 1884 ஆண்டில் சோசலிச கூட்டமைப்பை நிறுவினார், ஆனால் அந்த அமைப்புடன் 1890 ஆண்டில் தனது உறவை முறித்துக் கொண்டார். 1891 ஆம் ஆண்டில் அவர் கெல்ம்ஸ்காட் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் பிரகாசமான பாணியில் அச்சிடப்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். தனது இறுதி நாட்களை இந்த பதிப்பகத்திற்காகவே கழித்தார்.
விக்டோரியா காலத்து பிரித்தானியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க கலாச்சார நட்சத்திரங்களில் மோரிஸ் ஒருவரானார். ஒரு கவிஞராக தனது வாழ்நாளில் சிறப்பாக அறியப்பட்டிருந்த போதிலும், அவர் இறந்த பின்னர் அவரது ஆடை வடிவமைப்புகளுக்காகவும் நன்கு அறியப்பட்டார். 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வில்லியம் மோரிஸ் சமுதாயம் அவரது மரபுவழியில் அர்ப்பணித்துக்கொண்டது, அதே சமயம், அவரது பல படைப்புகள் மற்றும் அந்த படைப்புகளில் பெற்ற அறிவு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறது. அவரது வாழ்க்கையுடன் தொடர்புடைய பல கட்டிடங்கள் பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அவருடைய ஆடை வடிவமைப்புகள் இன்னும் உற்பத்தி செய்யப்படும் நிலையில் உள்ளது.
Remove ads
வாழ்க்கை வரலாறு
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
வில்லியம் மோரிஸ் இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியில் பிறந்தார். உயர்கல்வியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். கல்வியை முடித்த பின் கட்டிடக்கலையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தினார். ஜேன் பர்டனை மணந்தார்.
முதல் பதிப்பும் வசன கவிதைகளும்
முக்கிய படைப்புகள்
இறப்பு
1896 அக்டோபர் 3 இல் வில்லியம் மோரிஸ் மரணமடைந்தார்,
வலைப்பக்கங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads