வில்லியம் வெட்டர்பர்ன்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

வில்லியம் வெட்டர்பர்ன்
Remove ads

சர் வில்லியம் வெட்டர்பர்ன் (Sir William Wedderburn), (25 மார்ச் 1838 25 ஜனவரி 1918), ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய இந்தியாவின் அரசின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆவார்.

விரைவான உண்மைகள் சர் வில்லியம் வெட்டர்பர்ன், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ...
Thumb
ஆலன் ஆக்டவியன் ஹியூம் (இடது), தாதாபாய் நௌரோஜி (நடுவில்), சர் வில்லியம் வெட்டர்பர்ன் (வலது)

அவரது பணிக்காலத்தில் இந்திய வேளாண்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர முயற்சித்தார். இவரது முயற்சிகளுக்கு ஆங்கிலேய நிர்வாகாத்தினர் முட்டுகட்டைகள் போட்டதால், அரசுப் பணியிலிருந்து விலகி, இந்திய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஆகியவர்களுடன் இணைந்து 1885ல் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பை பம்பாய் நகரத்தில் நிறுவி, இந்தியர்களுக்கான சுயாட்சி அரசை நிறுவ உதவினார். [1][2]


Remove ads

பணிகள்

1860ல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்த வில்லியம் வெட்டர்பர்ன், சிந்து மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் பம்பாய் மாகாண அரசின் செயலளர் பதவியிலும், 1885 முதல் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். 1887ல் பம்பாய் மாகாண அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய வேளாண் குடிமக்கள் அநியாய வட்டிக்கு கடன் பெற்று, பின்னர் கடனை தீர்ப்பதற்கு படும் துயரங்களை நீக்க வேண்டி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நிறுவ பாடுபட்டவர். மேலும் இந்தியா நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகளை நிறுவி, அதன் மூலம் இந்தியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டவர்.

இந்திய மக்கள் நவீன அரசியலை கற்றுக் கொள்வதற்கு வசதியாக, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஆகியவர்களுடன் இணைந்து 1885ல் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பை நிறுவ பாடுபட்டார். வில்லியம் வெட்டர்பர்ன், 1889-1890 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். கோபால கிருஷ்ண கோகலேவுடன் நெருங்கிப் பழகியவர்.

வில்லியம் வெட்டர்பர்ன் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக 1893 முதல் 1900 வரை பணியாற்றியவர்.

Remove ads

வெளிட்ட நூல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads